சிறைத் துறை அதிகாரிகளுக்கு
உள்துறை அமைச்சகம் உத்தரவு
சிறையில் கைதிகளுக்குள் இடையே ஜாதி ரீதியான பாகுபாடு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் சிறைத்துறை டி.ஜி. அய்.ஜி.களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரில் நில நடுக்கம்
மணிப்பூரில் சுராசந்த்பூர் பகுதியில் நேற்று மதியம் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12.35 மணிக்கு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மய்யம் தெரிவித்துள்ளது.
128 ரயில்கள் வேகம் அதிகரிப்பு
தெற்கு ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் ரயில் தண்டவாளத்தை மேம்படுத்தியதன் மூலமாக 128 வரைவு மற்றும் அதிவிரைவு ரயில், பயணிகள் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில்களின் பயண நேரம் குறைந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர்களுக்கு
தலைமைச் செயலாளர் உத்தரவு
நீதிமன்றங்களில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்படும் பிரமாண பத்திரம் மற்றும் பதில் மனுக்கள் உள்ளிட்ட பிற வழக்கு ஆவணங்களில் அரசு வழக்குரைஞர்களிடம் சான்றொப்பம் பெறுவது கட்டாயம் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு தலைமைச் செயலர் என். முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1.77 லட்சம் கோடி
ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, 2024 டிசம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வருவாயாக 1.77 லட்சம் கோடி ரூபாய் வந்துள்ளது. இது முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 7.3 சதவீதம் அதிகம்.
உரத்தின் விலை உயர்வை
தடுக்க நடவடிக்கை
டை – அம்மோனியம் பாஸ்பேட் (டி.ஏ.பி.) உரத்தின் விலையை கட்டுக்குள் வைக்கும் வகையில், விவசாயிகள் 50 கிலோ டி.ஏ.பி. உர மூட்டையை ரூ.1,350க்கு தொடர்ந்து பெறுவதை உறுதி செய்வதற்காக ரூ.3,850 கோடிக்கு சிறப்பு தொகுப்பு நிதியை வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
வெப்ப நிலை அதிகரிக்கும்
வானிலை ஆய்வு மய்யம்
இந்த ஆண்டில் வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளிலும், தென் தீப கற்பத்தின் மத்திய பகுதிகளிலும் அதிகபட்ச வெப்ப நிலையானது இயல்பான அளவைவிட அதிகமாகவே இருக்குமென்று இந்தியவானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.