தூத்துக்குடி, ஜன. 3- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 34ஆவது நிகழ்ச்சியாகத் தந்தை பெரியாரின் 51ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம் பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் 24.12.2024 அன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது.
சொ.பொன்ராஜ் தலைமை ஏற்று உரையாற்றினார். வைக்கம் விழாவில் கலந்து கொண்டதால் கிடைத்த பலனைச் சிறப்பாக வெளிப்படுத்தினார். அடுத்து, ‘தந்தை பெரியாரால் தமிழர் சமுதாயம் பெற்ற எழுச்சியும் மாட்சியும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் தொடங்கியளது.
முதலாவதாக சீ.மனோகரன் உரையைத் தொடங்கினார். அவர்தம் உரையில், “தந்தை பெரியாரின் சிந்தனையாளர்கள் குறைவாகத் தெரியலாம். ஆனால், ஒரு ஆலமரம் படர்ந்து கிளைகள் இலைகளோடு தெரியும் வேளையில் அதனின் வேர்களோ எங்கெங்கெல்லாமோ பாராநிலையில் படர்ந்து சென்றி ருப்பது போலவே பெரியாரின் கருத்துகள் எல்லாரிடமும் உணர்ச்சி யாக இருந்தே வருகிறது.
பெரியாரைப் படித்து விட்டால் அவரை வியக்காமல், நினையாமல் இருக்க முடியாது.
வ.உ.சி.யைத் தலைவராக ஏற்ற வர், சைவத்தைச் சாடி, அதனால் வீறுகொணட் பகைபோலும் சூழல் வந்தபோதும் கோபங்கொண்ட மறைமலையடிகளிடம் நட்பையே காட்டினார் பெரியார். நாமும் தந்தை பெரியாரின் மனிதநேயப் பண்பினைப் பற்றுக்கோடாகக் கொண்டு,
பகுத்தறிவுச் சிந்தனைகளை மக்களிடம் பரப்பிடு வோம்” என்றார்.
இறுதியாகச் சிறப்புரையாக, மா.பால்ராசேந்திரம், “வகுப்புரி மையை இன்றும் தமிழர்கள் பெற்று வரும் வரலாறு, புரோகித மணமுறை நீக்கிய சுயமரியாதை பெற்ற மணம் செய்திடும் வரலாறு, குடும்பக்கட்டுப்பாடு இன்று சிறப்புற அன்று பெரியார் அடைந்த இன் னல்கள்; சமபந்தி உணவு இன்று இயல்பானதற்கு அன்று அய்யா செய்த ஏற்பாடுகள், தமிழ் மொழியை எளிதாகக் கற்க, எழுத, அச்சேற்ற செய்த சீர்திருத்தம், பார்ப்பனர் தமிழரல்லர், நாம் திராவிடர், திராவிட நாடு திராவிடர்க்கே என்று விளக்கம் தந்தவர் பெரியார்.” இவ்வாறான போராட்டங்களால் தமிழரிடம் எழுச்சியை உருவாக்கி, மாண்புறச் செய்தவர் அறிவாசான் தந்தை பெரியார் என்றார்.
அடுத்து இராமசெல்வேந்திரன் நன்றி கூற நிகழ்ச்சி 12.30 மணிக்க நிறைவு பெற்றது. முன்னதாக தந்தை பெரியார் படத்திற்கு மாலையிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தோழர்கள், ந.சித்திரைபாண்டி, கி.கோபால்சாமி, மு.முனியசாமி, பொ.போஸ், சு.காசி, அ.பிரசாத், தமிழ்வேந்தன்,இ செ.செல்வக்குமார், செ.அவிரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.