தஞ்சை, ஜன.3 தமிழ்நாட்டில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரத்தில், தமிழ்நாடு ஆளுநரின் நோக்கம் நிறைவேறாது என்று தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
பல்கலைக் கழக துணைவேந்தர்
தஞ்சாவூர் அருகே ராராமுத்திரக கோட் டையில் புதிய நிலைய விலைக் (ரேஷன்) கடை திறப்பு விழாவில் நேற்று பங்கேற்ற செய் தியாளர்களிடம் கூறிய தாவது: தமிழ்நாட்டில் காலியாக உள்ள பல் கலைக்கழக துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான விவகாரத்தில், தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாட்டை நாடே உற்றுநோக்குகிறது.
ஆளுநரின் உரிமை என்ன, கடமை என்ன என்பதை அரசமைப்புச் சட்டம் பல்வேறு நெறிமுறைகளில் தெரிவி த்திருக்கிறது. ஆனால், ஆளுநரின் செயல்பாடுகள் அவற்றுக்கு மாற்றாக உள்ளன. இதனால் துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது.
துணை வேந்தர் நியமனத்தில் மூன்று உறுப்பினர்கள் தேர்வுக் குழு என்பதை நான் காக அதிகரிப்பதன் மூலம், நியமனத்தை தடுப்பது தான் ஆளுநரின் நோக்கமாக உள்ளது. இது நிச்சயம் நிறைவேறாது. முறைப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக் கப்பட்டு, துணைவேந்தர் நியமனம் நடைபெறும். மாணவர்கள் நலனில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம். மாணவர்கள் நலன் கருதி சிந்திக்கிற, செயல்படுகிற முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.