அமைச்சர் மா. சுப்பிரமணியம் அண்ணாமலைக்கு பதிலடி
சென்னை, ஜூலை 20 தமிழ்நாட்டில் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் நிறுத்தப்படவில்லை. ஒன்றிய அரசின் மென்பொருளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளால் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. பெண்கள், கருவுற்ற 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களுடன் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். அவர் களுக்கு ‘பிக்மி’ எண் வழங்கப்பட்டதும், முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் இருந்து அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.2,000 வரவு வைக்கப்படும். 4-ஆவது மாதத்துக்கு பிறகு, இரண்டாவது தவணையாக ரூ.2,000 வழங்கப்படும். இதற்கிடையே, உடல்திறனை மேம் படுத்த இரும்புச்சத்து டானிக், உலர் பேரிச்சை, புரதச்சத்து பிஸ்கட், ஆவின் நெய், அல்பெண்டசோல் மாத்திரை, கதர் துண்டு அடங்கிய ரூ.2,000 மதிப்புள்ள பெட்டகம் 2 முறை கொடுக்கப்படும். அரசு மருத்துவமனையில் மகப்பேறு முடிந்த பிறகு, 3ஆ-வது தவணையாக ரூ.4,000, பேறு காலம் முடிந்து குழந் தைக்குத் தடுப்பூசி போடும் காலத்தில் 4ஆ-வது தவணையாக ரூ.4,000, குழந் தைக்கு 9ஆ-வது மாதம் முடிந்தவுடன் 5-ஆவது தவணையாக ரூ.2,000 வழங்கப் படும். இவ்வாறு ரூ.14,000 ரொக்கம், ரூ.4,000 மதிப்புள்ள பெட்டகம் என ரூ.18,000 மதிப்பிலான உதவி வழங்கப் படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிதியுதவி யாருக்கும் கிடைப்பது இல்லை என்று புகார் எழுந்தது. இதுதொடர்பாக செய்திகளும் வெளியாகின.
இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது: டாக்டர் முத்துலட் சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் கடந்த 2006-இல் ரூ.6,000 வழங்கப்பட்டது. அது தற்போது ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஒன்றிய அரசின் பங்களிப்பு ரூ.3,000 மட்டுமே. தமிழ்நாட்டில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் கடந்த 2006 முதல் தற்போது வரை 1.14 கோடி பெண்களுக்கு ரூ.11,702 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பிரதமர் மாத்ருவந்தனா திட்டத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இத்திட்டத்தில் இணையவழி பதிவேற்றத்தில் சில குறைபாடுகள் ஏற்பட்டதால், பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் நிதியுதவி விடுவிக்கப்பட வில்லை. இதுதொடர்பாக மாநில மக்கள் நல் வாழ்வுத் துறை சார்பில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டு, 3 ஆய்வு கூட்டங் கள் நடத்தப்பட்டன. டில்லியில் உள்ள தேசிய தகவல் மய்யத்துக்கு தமிழ்நாடு சுகாதார திட்ட உறுப்பினர்கள் சென்று, மென்பொருள் பொறியாளர்களுடன் நேரடியாக ஆய்வு நடத்தினர். இந்த குறைபாடுகள் காரணமாகவே, இத்திட் டத்தில் தற்காலிகமாக தாமதம் ஏற்பட் டுள்ளது. அத்திட்டம் நிறுத்தப்பட வில்லை. நிலுவையில் உள்ள பயனாளி களுக்கு விரைவில் நிதியுதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.