எழுத்தாளர் ஜீன் கரோலை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்புக்கு எதிராக அளித்த தீர்ப்பை அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மறு விசாரணை கோரிய டிரம்பின் மேல்முறையீட்டு கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன், டிரம்ப் தங்களை பாலியல் வன்கொடுமைக்கு செய்ததாக குற்றம்சாட்டிய இரு பெண்களின் சாட்சியத்தை ஏற்கவும் அனுமதி அளித்துள்ளது.