கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
2 Min Read

2.1.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* கேரள கோயில்களில் ஆண்கள் மேலாடையின்றி செல்லும் பழக்கத்தை நிறுத்த ஒரு தேவசம் போர்டு முடிவெடுக்க உள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
* ஓராண்டுக்கும் மேலாக வன்முறை நடைபெற்று வந்த மணிப்பூரின் நிலைமைக்கு வருத்தம் தெரிவித்தது போதாது. முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.
* வழிபாட்டுத் தலங்கள் குறித்த 1991 சட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி அசாதூதீன் ஒவைசி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* நாராயண குரு ‘மதச்சார்பற்ற மனிதநேய உலகக் கண்ணோட்டத்தை நிலை நிறுத்தினார்’ என்றும், ‘ஸநாதன தர்மத்தின் கட்டமைப்பிற்குள் அதைக் கட்டுப்படுத்தும் எந்த முயற்சியும் அவரை அவமதிப்பதாக இருக்கும்’ என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* 2020-2021 விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்திய விவசாய சங்கங்களின் குடை அமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்), விவசாயிகளை விசாரிக்க அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவுடன் பஞ்ச்குலாவில் ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.
தி இந்து
* 2023-2024ல் பள்ளி மாணவர் சேர்க்கை 1 கோடிக்கு மேல் குறைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிக்கை
* காந்தி மற்றும் அம்பேத்கரின் மரபுகளை சமூக நீதியின் ஒருமைக் கதையாக இணைத்து செயல்பட காங்கிரஸ் முடிவு.
தி டெலிகிராப்
* புத்தாண்டில் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ. ஆட்சி வீழ்த்தப்படும், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி பேச்சு.
* “சதுர்வர்ண அமைப்பை அடிப்படையாகக் கொண்ட வர்ணாசிரம தர்மத்துடன் ஸநாதன தர்மம் ஒத்ததாகவோ அல்லது பிரிக்க முடியாததாகவோ இருக்கிறது. இந்த வர்ணாசிரம தர்மம் எதைக் குறிக்கிறது? இது பரம்பரை தொழில்களை மகிமை படுத்துகிறது. நாராயண குரு என்ன செய்தார்? பரம்பரைத் தொழில்களை மீறுவதற்கு அவர் அழைப்பு விடுத்தார். அப்படி இருக்கும்போது, குரு எப்படி ஸநாதன தர்மத்தின் வக்கீலாக இருக்க முடியும்? என பினராயி விஜயன் கண்டனம்.

.- குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *