தஞ்சை கழக மகளிரணி – மகளிர் பாசறை கலந்துரையாடலில் முடிவு
தஞ்சை, ஜன. 2- தஞ்சாவூர் கழக மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறை கலந்துரை யாடல் கூட்டம், தஞ்சாவூர் பெரியார் இல்லத்தில் 19/12/24 அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.
கலந்துரையாடல் கூட்டத் திற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் இ.அல்லிராணி தலைமையேற்றார். மேனாள் மாநில மகளிர் செயலாளர் அ.கலைச்செல்வி வரவேற்புரை ஆற்றினார் . தஞ்சை மாவட்ட கழக மாவட்ட தலைவர் வழக் குரைஞர் சி.அமர்சிங், கழக காப்பாளர் அய்யனார், மாநகர துணைச் செயலாளர் வீரக்குமார், தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன். மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோபு பழனி வேல், திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை ஸ்டாலின். வல்லம் நகரத் தலைவர் அழகிரி, செந்தில், மற்றும் மகளிர் தோழர்கள் மணிமொழி குணசேகரன், ச.அஞ்சுகம், மலர்க்கொடி, ரமணி, அல்பேனியா, ந. கலைச்செல்வி, ப. கலையரசி, சு.அமுதா, வீ.அனுராதா, சாருலதா, வெண்ணிலவு, சுசிலா, மலர்க்கொடி, முருகம்மாள், அ.சாந்தி, ப.யாழிசை, காவியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்களை குறித்து மாநில மகளிர் அணி செயலாளர் தகவல் தமிழ் செல்வி உரையாற்றினார்.
இல்லங்களில் சந்திப்பு
தமிழர் தலைவர் அவர்களின், வேண்டு கோளுக்கிணங்க மகளிர் தோழர்கள் அடிக்கடி, மகளிர் தோழர்களின் இல்லங்களில் சந்திப்புகளை நடத்த வேண்டும் என்றும்,
தொலைக்காட்சியில் வருகின்ற மூடநம்பிக்கைகளை எதிர்த்து, வீட்டிற்குள்ளேயே, குடும்பத்தில் உள்ள மகளிர் தோழர்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும்,
தலைமுறை தலைமுறையாக இந்த கொள்கை கடத்திச் செல்லப்பட வேண் டும் என்றால் நம் வீட்டில் இருக்கின்ற, பெரியார் பிஞ்சுகளுக்கும் பெரியார் பிஞ்சு மாத இதழை வாங்கிக் கொடுத்து படிக்க வைக்க வேண்டும் என்றும்,
மாவட்ட பொறுப்பாளர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மகளிர் அணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும்,
மகளிர் அணி, மகளிர் பாசறை சார்பாக தனியாக தெருமுனை கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும்,
100 பொதுக்கூட்டங்கள்
தமிழர் தலைவர் அண் மையில் அறிவித்திருக்கின்ற 100 பொதுக் கூட்டங்களில், மகளிர் தோழர்கள் பெரு மளவில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் உரையாற்றினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா .ஜெயக்குமார் சிறப்பான ஒரு வாழ்த்துரையை வழங்கினார்.
அவர் தன் வாழ்த்துரையில், தஞ்சாவூர் மாவட்ட கழகத்தில் இருக்கின்ற மகளிர் தோழர்கள், அறிவியல் சிந்தனை நிரம்பிய வர்களாகவும், நல்ல பேச்சாற்றல் கொண்டவர்களாகவும் இருக் கின்ற காரணத்தால் நிகழ்வுகளை அவர்களே முன்னெடுத்து நடத்தலாம், என்றும்
மகளிர் அணி மகளிர் பாசறை பொறுப்பாளர்களே ஏற்பாடு செய்து தெருமுனை கூட்டங்களை நடத்தலாம் என்றும், அதற்கு கழகத் தோழர்கள் ஒத்துழைப்பு நல்கு வார்கள் என்றும் மகளிர் தோழர்களை உற்சாகப்படுத்தி வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒரு சிறப்பான ஒத்துழைப்பை நல்கிய மாவட்ட தலைவர் சி.அமர்சிங் பேசும் பொழுது, மகளிர் தோழர்கள் அதிக அளவில் பங்கெடுக்கும் வண்ணம், குடும்பங்கள் கூடும் கொள்கை விழா நடத்தி, மதிய விருந்தோடும்,மகளிர்க்கான சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தலாம் என்றும், அதற்கு மாவட்ட திராவிடர் கழகம் மிகுந்த ஒத்துழைப்பு நல்கும் என்றும் உரையாற்றினார் .
மகளிர் தோழர்களை ஒருங்கிணைக்கும் பணியை, அ. கலைச்செல்வி மற்றும் அஞ்சுகம் சிறப்பாக செய்திருந்தனர் ..
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அத் தனை மகளிர் தோழர்களுக்கும், நீட் நுழை வுத்தேர்வு கூடாது ஏன்? என்ற சிறிய புத்தகம், தகடூர் தமிழ்ச்செல்வியால் வழங்கப்பட்டது .
பெரியார் பிஞ்சு சந்தா வழங்கியோர்
அமர்சிங், கலைச்செல்வி, அய்யனார், மலர்க்கொடி, அல்லிராணி, மலர்க்கொடி திருவையாறு, சாந்தி, ச.அஞ்சுகம், வீரக் குமார்,
கலந்துரையாடல் கூட்டத்தில் கீழ்கண்ட மகளிர் தோழர்கள் பொறுப் பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
புதிய பொறுப்பாளர்கள்
மாவட்ட மகளிர் அணி தலைவர் தஞ்சை அ.கலைச் செல்வி, செயலாளர் இ அல்லி ராணி வடசேரி, துணைத் தலைவர் த.வள்ளியம்மை, துணைச் செயலாளர் தெ.மலர்க்கொடி, மகளிர் பாசறை தலைவர் ச அஞ்சுகம், செயலா ளர் வெண்ணிலவு, தஞ்சை மாநகரம்
மகளிர் அணி தலைவர் ந.கலைச் செல்வி, மகளிர் அணி செயலாளர் ப.சாந்தி.
தஞ்சை மாநகரம் மகளிர் பாசறை அமைப்பாளர் இரா.ரமணி, தஞ்சாவூர் ஒன்றியம்
மகளிர் அணி அமைப்பாளர் .அ.சாருலதா. திருவையாறு ஒன்றியம், மகளிர் அணி தலை வர் அல்பேனியா, மகளிர் அணி செயலாளர் மலர்க்கொடி
பூதலூர் ஒன்றியம், மகளிர் அணி அமைப்பாளர் வி. சுசீலா, ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம்இ மகளிர் அணி அமைப்பாளர் சு.மாதவி.