தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள், “வெற்றி முழக்கம்” தமிழ்நாடு,கேரளா முதல மைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசு வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக் கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் விவரம் வருமாறு:
அறந்தாங்கி
தலைமைக் கழக அறிவிப்பிற்கிணங்க 26-12-2024 அன்று அறந்தாங்கியில் நடைபெற்ற “வைக்கம் வெற்றி முழக் கம்” திராவிடர் கழக விளக்கப் பொதுக் கூட்டத்தில், ஆரம்ப நிகழ்வாக தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சோம. நீல கண்டனின் “மந்திரமா? தந்திரமா? அறி வியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழக தோழர் யோவான் வரவேற்புரை ஆற்றினார். கழக பேச்சாளர், வழக்கறிஞர் பூவை புலிகேசி சிறப்புரையாற்றினார்.
ஆ. வேல்சாமி தலைமை ஏற்க, மாவட்ட தலைவர் க. மாரிமுத்து, மாவட்ட செயலாளர் பேராசிரியர்
ச.குமார், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலர் க. வீரையா, சி.பி.அய் நகரச் செயலாளர் தோழர் க.அஜாய் குமார் கோஷ், விடுதலை வின்சென்ட் ராசேந்திரன், ப.க. சி. பன்னீர் செல்வம், ப.க. மரு. வீ சொக்கலிங்கம்,தொ மு ச செயலாளர், நா. யோகராசா ஆகியோர் முன்னிலையேற்றார்கள்.
மாநில மாணவர் கழக செயலாளர், இரா. செந்தூரபாண்டியன், வி சி க கார்த்தி, துணைத்தலைவர் ப. மகாராசா, ஒன்றிய செயலாளர்கள் ந. சிவசாமி, மு. கார்த்தி, மு தேவேந்திரன், வழக்குரைஞர் இரா. குமார், தேவிநீலகண்டன், நீ.அறிவுச் செல்வன், நீ அன்புச்செல்வன், த. குமார், வசீகரன், ஞானசேகரன், விஜயசுந்தரம் உள்ளிட்ட அணைத்துக்கட்சி தோழர்கள் பங்கேற்றார்கள். இளைஞரணிச் செயலாளர் பகுத்தறிவு பால்ராஜ் நன்றி கூறினார்.
உடுமலைப்பேட்டை
உடுமலைப்பேட்டை ஒன்றிய திராவிட கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம் தமிழ்நாடு கேரளா முதலமைச்சர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி பொதுக்கூட்டம் ஆலம்பாளையத்தில் மிகச் சிறப்பாகவிம் மிக எழுச்சியோடும் நூற்றுக்கு மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தை சிறப்பு செய்தனர்.
நிகழ்வின் தொடக்கமாக உடுமலை ஒன்றிய கழகத் தலைவர் பெரியார் பித்தன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தெற்கு ஒன்றிய திமுக கிளை செயலாளர் ராஜேந்திரன், சேது மாதவன், மணிகண்டன், திருமூர்த்தி, திராவிடர் முன்னேற்ற கழக தோழர்கள் இக்கூட்டம் சிறப்புடன் செயல்பட உறுதுணையாய் இருந்தனர்.
நிகழ்வில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் தமிழரசு சிபிஎம் கட்சியின் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். பழனி அழகர்சாமியின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி இளம் மாணவர்களிடம் வியப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள் நிகழ்வில் மாவட்டத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தம்பி பிரபாகரன், பகுத்தறிவாளர்களாக மாவட்ட தலைவர் வெங்கடாசலம், அமைப்பாளர் சபரி, கலையரசன், முருகேசன், செல்வராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் வினோத், மாவட்டத் துணைத் தலைவர் ஆறுமுகம், கணியூர் மயில்சாமி, தங்கவேல் திராவிடர் கழக தோழர்களும், ஆலம்பாளையம் கிராம பொதுமக்களும் மிக எழுச்சியுடன் கலந்து கொண்டனர். இறுதியில் ஒன்றிய செயலாளர் கந்தபடி வேல் நன்றியுரை கூறினார்.