சுயஅதிகாரம்
தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தில் இதுவரை 311.61 கோடி கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பேருந்து பயணத் திட்டம் சுயஅதிகாரம் கிடைக்க வழி செய்வதாகப் பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சோதனை
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சிறுநீரகப் பாதிப்புகளை ஆரம்பத் திலேயே கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ளப் படுவதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தகவல்.
அதிகாரம்…
குண்டர் சட்ட உத்தரவில் கையெழுத்திடும் அதி காரத்தை காவல்துறை அய்ஜிக்களுக்கு வழங்கத் தேவை யில்லை. அந்த அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களிடமே இருக்கலாம் என உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறன் பயிற்சி
தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு, மூன்று மாத காலத்திற்கு திறன் பயிற்சியும், 7 நாள்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது என தொழிலாளர் ஆணையம் தெரிவித்துள்ளது.