தமிழ்நாடு அரசின் கைவினைத் திட்டத்திற்கு 10 ஆயிரம் பேர் மனு
சென்னை, ஜன.2 ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கலைஞர் கைவினை திட்டத்தில் பயன்பெற வெறும் 20 நாட்க ளில் சுமார் 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கைவினைக் கலைஞர்களை தொழில்முனைவோர்களாக உயர்த்திட கலைஞர் கைவினை திட்டம் என்ற புதிய திட்டத்தை கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்த திட்டத்தில் கைவினை கலைஞர்களுக்கு அதிக பட்சமாக ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படும். அத்துடன் ரூ. 50 ஆயிரம் வரை மானியமும், 5 சதவிகிதம் வட்டி மானி யமும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
மக்கள் ஆதரவு
திட்டம் அறிவிக்கப்பட்டு 20 நாட்களில் 8,862 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒன்றிய அரசின் விஸ்வ கர்மா யோஜனா திட்டத் திற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கலைஞர் கைவினை திட்டத்திற்கு தமிழ்நாடு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவது இதன் மூலம் உறுதியாகி உள்ளது. விண்ணப்பிப்போரை தேர்வு செய்வதற்கு பணிக்குழு உருவாக்கப்பட்டு அந்த குழு பயனாளிகளை தேர்வு செய்து வருகிறது. மறு புறத்தில் ஒன்றிய அரசு அறிமுகம் செய்து இருக்கும் விஸ்வகர்மா யோஜனா திட்டம் குலக்கல்வியை ஊக்குவிக்கும் திட்டம் என்று தமிழ்நாடு அரசு கூறி வருகிறது.
வரவேற்பு
தச்சர்கள், குயவர்கள், காலணி தயாரிக்கும் தொழி லாளர்கள், சலவைத் தொழி லாளர்களின் குழந்தைகள் அதே தொழிலை தொடர்வ தற்கே கடன் உதவி வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. இது ஜாதிய பாகுபாட்டை நிலை நிறுத்துவதற்கான முயற்சி என்று கூறிவரும் தமிழ்நாடு அரசு, அதற்கு மாற்றாக கலைஞர் கைவினைத் திட்டத்தை அறிமுகம் செய்தது. குடும்பத் தொழிலை அடிப்படையாக வைக்காமல் 25 கைவினை கலைகள் மற்றும் தொழில்களுக்கு கடன் உதவி வழங்குவதால் இதற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.