சூரிய குடும்பத்தில் நெப்டியூனுக்கு அடுத்த படியாக மறைந்திருக்கும் 9ஆவது கோளை கண்டுபிடிக்கும் முயற்சியில் விண்வெளி ஆராய்ச்சி யாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
2014 முதல் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், இது பூமியை விட 5-7 மடங்கு பெரிதாக இருக்கும் எனவும், சூரியனை சுற்றி வர 10,000 முதல் 20,000 ஆண்டுகள் ஆகும் எனவும் கூறுகின்றனர். இருப்பினும், சில ஆய்வாளர்கள் புதிய கோள் இருப்பதை சந்தேகிக்கின்றனர்.