வீரக்குடி மணக்காடு, ஜூலை20– பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேது பாவாசத்திரம் ஒன்றியம் வீரக்குடி மணக்காட்டில் வைக்கம் நூற்றாண்டு, கலைஞர் நூற் றாண்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 90இல் 80 சிறப்பு, கழகப் பிரச்சார கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
வீரக்குடி மணக்காட்டில் புரட் சியாளர் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் 14.7.2023 வெள்ளி யன்று மாலை 6 மணி அளவில் கழக சார்பில் கழக ஒன்றிய பொறுப்பாளர் மு.மூர்த்தி தலை மையில் நடைபெற்ற கூட்டத்தில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய இளைஞர் அணி தலைவர் சு.வசி வரவேற்றார்.
பொதுக்குழு உறுப்பினர்கள் அரு.நல்லதம்பி, பேராவூரணி இரா.நீலகண்டன் ஒன்றிய கழகத் தலைவர் சி.செகநாதன் முன்னிலை வகித்தனர்.
மாநில கிராமப்புற பகுத்தறிவு பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன் 90 நிமிடம் வைக்கம் போராட்ட நூற்றாண்டு முத்தமிழறிஞர் மானமிகு சுயமரி யாதைக்காரன் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 90 ஆம் ஆண்டில் 80 ஆம் ஆண்டு பொது வாழ்க்கை விழா குறித்தும் விளக்க உரையாற்றினார்.
கூட்டத் தொடக்கத்தில் கழக மாவட்ட அமைப்பாளர் மந் திரமா, தந்திரமா? நிகழ்ச்சியாளர் சோம.நீலகண்டன் மந்திரம் அல்ல தந்திரமே என்கின்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சியை ஒரு மணி நேரம் மக்கள் மத்தியில் செய்து காட்டினார்
இக்கூட்டத்தில், வீரக்குடி மணக் காடு ஒன்றிய குழு உறுப்பினர் தங் கப்பா, பகுத்தறிவாளர் கழக பொறுப் பாளர் சு.சதீஷ் குமார், தமிழக புரட்சிக்கழக ஒன்றிய பொறுப் பாளர் மா..இராசா, சேது பாவா சத்திரம் தெற்கு ஒன்றிய பொறுப் பாளர் சிறுத்தை இரமேஷ், திரா விடர் கழக அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் ப.மகா ராசா, பேராவூரணி நகர கழக செயலாளர் சி சந்திரமோகன், கழக ஆர்வலர் ஆசிரியர் வீரக்குடி மகாலிங்கம், விடுதலை சிறுத் தைகள் கட்சி பொறுப்பாளர் குண சேகரன், வீரக்குடி திமுக கிளை செயலாளர் ப.ஆசைத்தம்பி, மணக் காடு திமுக கிளைச் செயலாளர்
ச.துரை, மாயழகு உட்பட ஏராள மான தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சேது பாவாசத்திரம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கழனி வாசல் பொ.சந்தோஷ் குமார் நன்றி கூறினார். பொதுக் கூட்டத்தை ஒட்டி கழகக் கொடி கள் சிறப்பான முறையில் கட்டப் பட்டு இருந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கழகப் பொறுப் பா ளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.