இந்தியாவிலேயே போராட்டத்திற்குப் பெண்கள், தலைமை தாங்கி வழிகாட்டியது திராவிடம் – தமிழ்நாடு – பெரியார் குடும்பம்!
‘‘நம் நாட்டு வரலாற்றில், அரசியல் போராட்டம் என்றால், அது வெறும் இனப் போராட்டம் – சம தர்மத்திற்கு, சம உரிமைக்கான போராட்டம்!’’
கோவை, ஜன.1 இந்தியாவிலேயே போராட்டத்திற்குப் பெண்கள், தலைமை தாங்கி வழிகாட்டியது திராவிடம் – தமிழ்நாடு – பெரியார் குடும்பம்; ‘‘நம் நாட்டு வரலாற்றில், என்றைக்கும் அரசியல் போராட்டம் என்றால், அது வெறும் இனப் போராட்டம் – சம தர்மத்திற்கு, சம உரிமைக்கான போராட்டம்’’ என்று தந்தை பெரியார் கூறியதை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.
தந்தை பெரியார்
51 ஆவது நினைவு நாள்
கடந்த 26.12.2024 அன்று மாலை கோவையில் தந்தை பெரியார் 51 ஆவது நினைவு நாள் – ‘‘வைக்கம் வெற்றி முழக்கம்’’ – தமிழ்நாடு,கேரள மாநில முதல மைச்சர்களுக்கு நன்றி – ‘திராவிட மாடல்’ அரசின் வரலாற்றுச் சாதனைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
29.12.2024 அன்று ‘விடுதலை’யில் வெளிவந்த ஆசிரியர் உரையின் தொடர்ச்சி வருமாறு:
என்றைக்கும் தாங்கிப் பிடிக்கும் இந்தக் கரங்கள்!
அன்றைக்குத் தாங்கிப் பிடித்த இந்தக் கரங்கள், என்றைக்கும் தாங்கிப் பிடிக்கும்.
திடீரென்று அவருக்குப் பதவி வந்துவிடவில்லை; அவறொன்றும் திடீரென்று லாட்டரியில் பம்பர் பரிசு வாங்கவில்லை. மாறாக, அரசியலில் அதற்காக விலை கொடுத்தார்.
அதேபோன்றவர்தான் நம்முடைய எழுச்சித் தமிழர். இப்போது இவர் அந்தப் பக்கம் திரும்பினால் செய்தி, இந்தப் பக்கம் திரும்பினால் செய்தி; அவர் கொஞ்சம் அசர மாட்டாரா என்று நினைக்கிறார்கள்; உடனே அதைச் செய்தியாக்கவேண்டும் என்று சில பேர் விரும்புகிறார்கள். இவர் இரும்புப் போல!
எறும்புகள் இரும்பைத்தின்றுவிட முடியுமா?
இரும்புக்கும், எறும்புக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
எறும்புகள் எங்கேயாவது, இரும்பைத் தின்றுவிட முடியுமா? என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
பழைய துரும்புகளே, இதைப் புரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் இரும்பு அல்ல; நாங்கள்தான் இரும்பு. எறும்பு என்றுகூட உங்களைச் சொல்லக்கூடாது; எறும்புக்காவது கொஞ்சம் கடிக்கின்ற உணர்வு உண்டு. நீங்கள் வெறும் துரும்பு.
ஆகவேதான், இரும்பை விரும்புவோம்; துரும்பைத் தூக்கியெறிவோம்.
ஏனென்றால், இரும்பை அடிக்க அடிக்க, அது பதமாகி, பதமாகி கருவிகளாக வரும்.
வைக்கம் போராட்டத்தில் பங்கேற்ற பெரியார் அவர்கள் முதன்முறையாக கைது செய்யப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்படுகிறார்.
பெரியார்மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்தனர்!
மீண்டும் அவர் அந்தப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்பதற்காக அவர்மீது 124-ஏ பிரி வில் (அரச துரோகம்) வழக்குப் பதிவு செய்கிறார்கள்.
எப்படி வைக்கம் போராட்டம் ஒரு விதைப் பண்ணை? வெறும் அறுவடை அல்ல; தாய்மார்கள், சகோதரிகள் பங்களிப்பு என்ன? என்பதை இன்றைய தாய்மார்கள், சகோதரிகள் தெரிந்துகொள்ளவேண்டும்.
பொய்யை விற்றே இன்றைக்குப் பல பேர் பிழைக்கிறார்கள் அரசியலில்!
வைக்கம் சத்தியாகிரகத்தின்மூலமாய் அடைந்த தண்டனையிலிருந்து ஈ.வெ.ராமசாமி நாய்க்கர் விடுதலையாகி, தமிழ்நாட்டிற்கு வந்தவுடன், இந்த இடத்தை நன்றாக நீங்கள் கவனிக்கவேண்டும்; வைக்கம் போராட்டத்திற்கு பெரியார் எதுவும் செய்ய வில்லை; போராட்டக் களத்திலிருந்து பெரியார் திரும்பி வந்துவிட்டார்; பெரியாரால் வைக்கம் போராட்டம் நடத்தப்படவில்லை என்று இன்னமும் தைரியமாகப் புளுகிக் கொண்டிருக்கிறார்கள். பொய் சொல்லியே அவர்களுக்குப் பழக்கம். பொய்யை விற்றே இன்றைக்குப் பல பேர் பிழைக்கிறார்கள் அரசியலில்.
தந்தை பெரியார் மறுபடியும் வைக்கம் போகாமல் இருப்பதற்காக, ஒரு ‘பிராமண’ மெம்பரையும், ஒரு ‘பிராமண’ அட்வகேட் ஜெனரலையும் வேண்டி, அவர்கள் மூலமாக 9 மாதங்களுக்கு முன்னால் தந்தை பெரியார், 1924, மார்ச் மாதம் பேசிய பழைய குப்பை களை ஆதாரமாக வைத்து, இராஜதுரோகம் முதலிய வழக்கினை எடுத்து, அதன்மூலமாகப் பெரியாரை கைது செய்கிறார்கள்.
பெரியாரை, திட்டமிட்டு கைது செய்கிறார்கள்!
அதன்மூலமாக மீண்டும் வைக்கத்திற்குப் பெரியார் போகக்கூடாது என்பதற்காகத் திட்டமிட்டு கைது செய்கி றார்கள்.
தாய்மார்களே, பெரியோர்களே நன்றாகக் கவ னியுங்கள். வைக்கம் போராட்டம் உணர்ச்சிப் பொங்கக்கூடியது. வைக்கம் ஸ்பிரிட்டைப் புரிந்து கொள்ளுங்கள்.
கணவரின் கைதையொட்டி நாகம்மையார் வெளி யிட்ட அறிக்கை. எப்பொழுது தெரியுமா?
காங்கிரஸ் பேரியக்கம் – ஒரு பக்கத்தில் காந்தியார் – ஒரு பக்கத்தில் எதிர்ப்பு – எப்பொழுது நூறாண்டு களுக்கு முன்பு. அன்றைய காலகட்டத்தில் பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவார்களா? அல்லது வெளி யில்தான் வருவார்களா?
போராட்டத்திற்குப் பெண்கள் தலைமை தாங்கி வழிகாட்டியது பெரியார் குடும்பம்!
இந்தியாவிலேயே போராட்டத்திற்குப் பெண்கள், தலைமை தாங்கி வழிகாட்டியது திரா விடம் – தமிழ்நாடு – அதுவும் பெரியார் குடும்பம் ஆகும்.
கணவரின் கைதையொட்டி நாகம்மையார் வெளியிட்ட அறிக்கையில், வைக்கம் போராட்டம் தொடர்ந்து நடத்தப்படவேண்டும் என்ற விருப்பத்தை அவர் அறிவிக்கிறார்.
அன்னை நாகம்மையாரின்
அறிக்கை!
12.9.1924 ஆம் ஆண்டு வெளிவந்த ‘நவசக்தி’ இதழில் அன்னை நாகம்மையாரின் அறிக்கை இது.
‘‘என் கணவர் ஈ.வெ.இராமசாமி நாயக்கர், இந்த மாதம் முதல் தேதி திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலையானார். 11 செப்டம்பர் 1924 காலை 10 மணிக்கு மறுபடியும் ராஜதுரோகக் குற்றத்திற்காக சென்னையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
இரண்டு வருஷத்திற்குக் குறைவில்லாத காலம் தண்டனையாகக் கிடைக்கக்கூடிய பாக்கியம் தமக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்லி, என்னிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டுவிட்டார்.
அவர் திரும்பத் திரும்ப தேச ஊழியத்தின் பொருட்டு சிறைக்குப் போகும் பாக்கியம் பெறவேண்டும் என்றும், அதற்காக அவருக்கு ஆயுள் வளரவேண்டும் என்றும், கடவுளையும், மகாத்மா காந்தியையும் பிரார்த்திக்கிறேன்’’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த இயக்கத்தைச் சில்லுண்டிகளே உங்களால் சீண்டிப் பார்க்க முடியுமா?
இதுதான் திராவிட இயக்கம் – இவ்வளவு வலிமை யான அடிக்கட்டுமான இயக்கத்தை சில்லுண்டிகளே உங்களால் சீண்டிப் பார்க்க முடியுமா? இந்தக் கட்ட டத்தோடு உங்களால் மோதிப் பார்க்க முடியுமா?
எனவே, இவர் இந்த அணியிலிருந்து போய்விடுவார்; அவர் அந்த அணியிலிருந்து மாறிவிடுவார் என்கிற கதையெல்லாம் அளக்காதீர்கள். அந்தக் கதை நீண்ட நாள்கள் நிலைக்காது. ‘‘கெட்டிக்காரன் புளுகுக்கு எட்டே நாள்கள்தான் உச்சவரம்பு’’ என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
தெற்கே கைத்தடி – வடக்கே பேனா – சிந்தனை இவை அத்தனையும் வளர்ந்தது. அதனால்தானே, இன் றைக்குக்கூட ‘‘அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்’’ என்றால், மின்சாரத்தில் கை வைத்ததுபோல அலறு கிறார்கள்.
அம்பேத்கர் அவர்கள் மனமுடைந்து அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்
அந்த அம்பேத்கர்தானே பெண்களுக்கு இந்து கோட் பில் – இந்து சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்தார். அதனை நிறைவேற்றவிடாமல் செய்ததினால், அம்பேத்கர் அவர்கள் மனமுடைந்து தன்னுடைய அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் என்பது வரலாறு.
இப்போது நாடாளுமன்றத்தில் தி.மு.க. கூட்டணி உறுப்பினர்கள் எழுந்து பேச ஆரம்பித்தாலே, ஒரு பக்கம் சிங்கம், இன்னொரு பக்கம் சிறுத்தை – இதைப் பார்த்தவுடன் எதிரணியினர் நடுங்கிப் போகிறார்கள். அதனுடைய வெளிப்பாடு, ஆத்திரம்தான், ‘‘‘அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்’ என்று சொல்லுவதைவிட, கடவுள் பெயரைச் சொன்னாலாவது மோட்சத்திற்குப் போகலாம்‘’ என்று சொல்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
பெரியார் தேவை – அம்பேத்கர் தேவை!
கடவுளை வேண்டிக்கொண்டால் மோட்சத்திற்குத்தான் உங்களால் அனுப்ப முடியும்; இந்த ஊரில் இருக்கின்றவர்களின் காயத்தை உங்களால் போக்க முடியுமா? அதற்கு அம்பேத்கர்தான் தேவை; அதற்குப் பெரியார்தான் தேவை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு மிகத் தெளிவாக அந்த உணர்வுகள் வேகமாக வளர்ந்திருக்கின்றன.
தந்தை பெரியார் ஒன்றைச் சொல்வார், ‘‘நம் நாட்டு வரலாற்றில், என்றைக்கும் அரசியல் போராட்டம் என்றால், அது வெறும் இனப் போராட்டம் – சம தர்மத்திற்கு, சம உரிமைக்கான போராட்டம்’’ என்று.
இன்றைக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது, நாடாளுமன்றத்தில் பிரதமர் உள்பட என்ன சொல்கிறார்கள் என்றால், ‘‘காங்கிரஸ், அம்பேத்கரை மதிக்கவில்லை’’ என்று.
அதற்கு என்ன அர்த்தம்?
அம்பேத்கருக்கு சிலை வைக்கவில்லை, அவருடைய படம் திறக்கவில்லை என்று சொல்கிறார்கள், உண்மைதான். அதற்கு நான் விளக்கம் சொல்கிறேன்.
எங்களுக்கு அரசியல் பார்வை கிடையாது!
ஏனென்றால், எங்களுக்கு அரசியல் பார்வை கிடையாது. ஆனால், தேர்தல் எங்களுக்கு முக்கியம். எதற்காக? இந்த உணர்வு படைத்தவர்கள் அங்கே இருக்கவேண்டும்.
யாரை அனுப்பினால், அங்கே சிறுத்தைகள், சிங்கங்கள், முழக்கங்கள், கர்ஜனைகள் எழுப்புவார்கள் என்பதுதான் எங்களுக்கு முக்கியம். நாங்கள் அங்கே போகமாட்டோம்; எங்களுக்குப் பதவி நாற்காலிகள் முக்கியமல்ல.
எங்களுடைய பணி என்ட்ரி வேலையல்ல; சென்ட்ரி வேலைதான்.
இந்தியாவே பாராட்டக்கூடிய முதலமைச்சர்!
வெளியிலிருந்து பாதுகாப்பதுதான். நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர், இந்தியாவே பாராட்டக்கூடிய முதலமைச்சர், இன்னும் பாதுகாக்கப்பட பெரியாரின் கைத்தடியை பதமான இடத்தில் வைத்துக் கொண்டுள்ள முதலமைச்சர். அவருக்குப் பாதுகாப்பு கொடுப்பதோடு, அந்தப் பதவியில் வேறு யாரும் அமர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்வதுதான் எங்களுடைய பணி.
இன்னும் சில பேர், நேற்று வந்தவர், அனுபவம் இல்லாத ஆள், இதனைச் செய்யலாமா? அதனைச் செய்யலாமா? அவரைக் கூப்பிடலாமா? இவரைக் கூப்பிடலாமா? என்று நினைக்கிறார்கள்.
எதைப்பற்றியும் கவலைப்படாத இயக்கம்!
இந்த இயக்கம் எதைப்பற்றியும் கவலைப்படாத இயக்கம். உண்மையைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.
அன்றைக்கு சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியில் அம்பேத்கர் படம் நாடாளுமன்றத்தில் திறக்கப்பட்டது.
வி.பி.சிங் அதைச் செய்தார். மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்தினார் என்பதற்காக அவருடைய ஆட்சியை கவிழ்த்தனர்.
மண்டல் அறிக்கையை அவர் எப்படி நடை முறைப்படுத்தினார்?
திராவிட இயக்கம்தான் அவருக்குக் கை கொடுத்த இயக்கம்தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவிற்கு.
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் யார்?
வி.பி.சிங் அவர்கள், நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் படத்தைத் திறந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, அவருடைய ஆட்சியை ஒழித்தவர்கள் யார்? அந்த ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் யார்?
நீங்கள் அல்லவா! பி.ஜே.பி. அல்லவா! ஆர்.எஸ்.எஸ். அல்லவா!
வெளியிலிருந்து உங்களுக்கு ஆதரவு தருகிறோம் என்று சொன்னவர்கள், மண்டல் அறிக்கையை வி.பி.சிங் அவர்கள் நடைமுறைப்படுத்தியதும், ஆதரவைத் திரும்பப் பெற்றனர்.
அப்பொழுது யார் யாருக்கிடையில் போராட்டம் என்று சொன்னார்கள்?
மண்டலுக்கும் – கமண்டலுக்கும்தான் போராட்டம்!
வி.பி.சிங் அவர்களை உரிமை கொண்டாட உங்களுக்கு உரிமை உண்டா?
தமிழ்நாடுதான் முக்கியம் என்று சொன்னவர் வி.பி.சிங்!
யாருக்கு உரிமை உண்டு என்றால், திராவி டத்திற்குத்தான் உரிமை உண்டு. ஏனென்றால், வி.பி.சிங் அவர்கள் சொன்னார், ‘‘எனக்குத் தமிழ்நாடுதான் மிகவும் முக்கியம்” என்று சொன்னார்.
அதுமட்டுமல்ல நண்பர்களே, அன்றைய காங்கிரஸ் வேறு; இன்றைய காங்கிரஸ் வேறு. இதனை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இன்றைய காங்கிரஸ் முற்போக்குச் சிந்தனை உள்ள காங்கிரஸ்!
அன்றைய காங்கிரஸ் வருணாசிரம காங்கிரஸ்; இன்றைய காங்கிரஸ் முற்போக்குச் சிந்தனை உள்ள ராகுல் காந்தி போன்றவர்களுடைய துடிப்பு மிகுந்தவர்களால் வழிநடத்தப்படுகிறது.
தன்னுடைய எதிரிகள் யார் என்றால், ஸநாதனிகள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்று வெளிப்படையாகவே சொல்லக்கூடியவர்கள்.
எந்தக் கொள்கைக்காக காஞ்சிபுரத்திலிருந்து காங்கிரஸ் கட்சியைவிட்டு தந்தை பெரியார் வெளியே வந்தாரோ, அந்தக் காங்கிரஸ் இன்றைக்கு இல்லை.
(தொடரும்)