தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த கடலூரில் 2.12.2024 அன்று கடலூர் மாவட்ட கழகம் சார்பில் சுயமரியாதை நாளாக கொண்டாடப்பட்டது. அரசு பொது மருத்துவமனை அருகில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில், காது கேளாத பார்வையற்ற 26 மாற்றுத்திறனாளிகளுக்கு கம்பளி ஆடை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் கலந்து கொண்டார். கடலூர் மாவட்ட கழக தலைவர் தென்.சிவக்குமார், மாவட்ட செயலாளர் எழிலேந்தி மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.