தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக ஒருங்கிணைப்பில், திருச்சியில் நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13-ஆம். இரண்டுநாள் (28-29.12.2024) தேசிய கருத்தரங்கம் மற்றும். மாநாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் திராவிடர் கழகத்தோழர்களுக்கும். இம்மாநாட்டில் பங்கேற்ற கேரளா, கருநாடகா, ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப், ஒடிசா, உத்ரகாண்ட், குஜராத், உ.பி, ம.பி, அரியானா, மேற்குவங்கம், போன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வருகைதந்து சிறப்பித்த பேராளர்களுக்கும் மாநாட்டின் அனைத்து நிழ்ச்சிகளும். ஒரு புத்தாக்கப் பயிற்சி பட்டறையாகவே அமைந்தன.
தேசிய மாநாட்டின் முதல்நாளில் திராவிடர் கழகத் தலைவரும், பகுத்தறிவாளர் கழகப் புரவலருமான, ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, தெலங்கானா மனவ விகாச வேதிகா அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட, “தேசிய மனிதநேயர் விருது-2024” மிகப் பொருத்தமானது.
ஆசிரியர் மேடையில் விருது பெற்ற போது. 1000-க்கும். மேலாகக் கூடியிருந்த பார்வையாளர்கள் பலரும் பழைய நினைவுகளில் முழுகி இருப்பார்கள்.
25-ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியரின் பிறந்தநாளான டிசம்பர்-02இல், அதே திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தின் ஓர் அங்கமாக இன்றும் இயங்கி வரும் ‘நாகம்மையார் குழந்தைகள் காப்பக’த்தின் பிள்ளைகளுடன் ஆசிரியரின் பிறந்தநாளினைக் கொண்டாட தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பிறந்தநாள் நிகழ்வு மேடையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கண் கலங்கினார்கள்! கழகத் தோழர்கள் பலருக்கும் அது திகைப்பாக இருந்தது, தந்தை பெரியாரின் அடிச்சுவட்டில் நாளும் வீறுகொண்டுப் பயணிக்கும் ஆசிரியர் இப்படிக் கண் கலங்கி அதுவரைத் தோழர்கள் பார்த்ததில்லை தான். உடனடியாக ஆசிரியர் ஒலி பெருக்கிப் பிடித்துப் பேசினார்கள்.
“இங்கு பேசிய பலரும் அனாதைக் குழந்தைகள் இல்லம், அனாதைக் குழந்தைகள் இல்லம். என்றே குறிப்பிட்டனர். நான் உயிருடன் இருக்கும் வரையில் இந்தப் பிள்ளைகள் அனாதைகள் அல்ல, உடனடியாக ‘அனாதை’ என்றச் சொல்லை நீக்குங்கள். வெறும் ‘நாகம்மையார் குழந்தைகள் காப்பகம்.’ என்றே எழுதவும் – பேசவும் வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். காப்பகத்தின் முகப்பில் அதுவரையில் இருந்த “அனாதை” என்ற சொல் அழிக்கப்பட்டு “நாகம்மையார் குழந்தைகள் காப்பகம்.” என்று மட்டும் திருத்தப்பட்டது.
காப்பகத்துக் குழந்தைகள் ஆசிரியர். கி.வீரமணி அவர்களைத் தந்தையாகவும், ஆசிரியர் அவர்களின் துணைவியார் திருமதி.மோகனா அம்மா அவர்களை தாயாகவும் ஏற்று வளர்கிறார்கள். கல்வியில் சிறந்து பட்டம் பலவும் பெற்று ஆசிரியர் அவர்களுக்குப் புகழ் சேர்க்கிறார்கள் என்பது
எத்தனை நெகிழ்வான, மனிதநேயப் பாடம் சொல்லும் நிகழ்வு!
எந்தப் பிறந்தநாளையும் ஆசிரியர் கொண்டாடுவதில்லை. ஆசிரியருக்குப் பிறந்தநாள் என்பதே ‘விடுதலை’ நாளிதழுக்கு சந்தா சேமிக்கும் நிகழ்வுதான். இவ்வாண்டு 2024 டிசம்பர் 02 ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய பாதிப்பினால். சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து நின்றனர். அப்போது அறிவிக்கப்பட்ட தனது 92ஆம். பிறந்தநாள் விழாவை நிறுத்தச் சொல்லி, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று உதவுங்கள் என்று தோழர்களை அறிவுறுத்தினார். தோழர்களும் தலைவரின் கட் டளையை ஏற்று நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.
இப்படி ஆசிரியரின் மனிதநேய செயல்களுக்குப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம், அப்படியான எங்கள் தலைவருக்கு தேசிய “மனிதநேய விருது” என்பது பொருத்தம் தானே!
– செந்துறை மதியழகன்