சென்னை, நவ. 16- புதுக்கோட் டையில் ரூ.67.83 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரசு பல் மருத் துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.11.2023) தலைமை செய லகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை சார்பில் ரூ.67.83 கோடி செலவில் தமிழ்நாடு அரசின் மூன்றாவது அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யான புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் புதுக் கோட்டை மாவட்டத்தில் ரூ.8.89 கோடி செலவில் பொது சுகாதாரத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 27 புதிய கட்டடங்களையும் தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த கல்லூரியில் 2023-2024 ஆண்டில் இருந்து ஆண்டு தோறும் 50 மாணவர்கள் சேர்க் கைக்காக அனுமதி பெறப்பட்டுள் ளது. இந்த அரசு பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை 10.14 ஏக்கர் பரப்பளவில் மருத்துவ மனை மற்றும் நிர்வாக கட்டடம், மாணவ மாணவிகள் விடுதி கட்ட டம், ஆசிரியர் மற்றும் முதல்வர் தங்கும் விடுதி போன்ற வசதிக ளுடன் கட்டப்பட்டுள்ளது.
கூடுதலாக, பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ மணைக்கு ரூ.5 கோடியே 10 லட்சம் மதிப்பிலான தேவையான அதி நவீன உபகரணங்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட் டுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த கல் லூரி மற்றும் மருத்துவமனைக்கு தேவையான ஆசிரியர், நிர்வாகம் மற்றும் கல்விசாரா பணிகளுக்கு 148 பணியிடங்கள் தோற்றுவிக்கப் பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட் டையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, மா.சுப் பிரமணியன், சிவ.வீ.மெய்யநாதன், நாடாளு மன்ற உறுப்பினர்கள் கே.நவாஸ் கனி, எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.முத்துராஜா, எம்.சின்னதுரை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யர் மெர்சி ரம்யா, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.