‘மெர்சல்’ என்ற திரைப்படத்தில் ஒன்றிய அரசின் வரிவிதிப்பை எதிர்த்து வசனம் பேசியதால் எச். ராஜா ஒரு பேட்டியின் போது திரைக்கலைஞர் விஜயை – கிறிஸ்டியன் ஜோசப் விஜய் ஹிந்து விரோதி – என்று அழைத்தார்.
பொதுவாக அனைவரும் விஜய் என்றே அழைப் பார்கள். அது வெளியே தெரிந்த ஒன்று. ஆனால் முதல் முதலாக விஜயை – ஜோசப் விஜய் என்று அழைத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார் எச்.ராஜா. இந்த நிலையில் நேற்று (30.12.2024) விஜய் தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்தார்.
இது தொடர்பாக செய்தி வெளியிட்ட ஆளுநர் மாளிகை ஜோசப் விஜய் ஆளுநரைச் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தார் என்று எழுதி ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளது.அன்று எச். ராஜா மதவெறியில் கூறிய ஜோசப் விஜயை இன்று ஆளுநர் மாளிகையும் அப்படியே எழுதியுள்ளது. ஆளுநர் சந்திப்பின் பலன் இதுதானா?