சென்னை, நவ.27- சென்னை மாநகருக்கு அடுத்த 10 மாதங் களுக்கு தேவையான குடிநீர் ஏரி களில் சேமிக்கப்பட்டு உள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.
நீர் பிடிப்பு பகுதிகளில் மழை சென்னை மாநகருக்கு குடி நீர் வழங்கும் பூண்டி, சோழவ ரம், புழல், கண்ணன் கோட்டை தேர் வாய்கண் டிகை, செம்பரம்பாக்கம் மற் றும் வீராணம் ஆகிய 6 நீர்த் தேக்கங்களின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. அந்தவகையில் நேற்று முன்தினம் (25.11.2023) காலை 8 மணியில் இருந்து நேற்று காலை 8 மணி வரை உள்ள 24 மணி நேர நிலவரப்படி குடிநீர் வழங்கும் ஏரிகளில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் 5.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதேபோல், வீராணம் 110 மி.மீ., கொரட்டூர் அணைக் கட்டு 11.6 மி.மீ.,நுங்கம்பாக்கம் 0.3 மி.மீ., மீனம்பாக்கம் 1 மி.மீ. மழை பதிவானது. முக்கிய ஏரிகளான பூண்டி, சோழவ ரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய் கண் டிகை ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அளவு பதிவாகவில்லை.
10 டி.எம்.சி. இருப்பு
குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருப்பை பொருத்த வரை யில், பூண்டி 1,881 மில்லியன் கன அடி (1.8 டி.எம்.சி.), சோழவரம் 729 மில்லியன் கன அடி, புழல் 2 ஆயிரத்து 780 மில்லி யன் கன அடி (2.7 டி.எம்.சி.), கண்ணன் கோட்டை தேர் வாய் கண்டிகை 436 மில்லி யன் கன அடி, செம்பரம்பாக் கம் 3 ஆயிரத்து 138 மில்லியன் கன அடி (3.1.டி.எம்.சி.), வீரா ணம் 1,087 மில்லியன் கன அடி உள்பட 10 ஆயிரத்து 51 மில்லி யன் கன அடி (10.51 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது. சென்னை மாநகருக்கு சரா சரியாக ஒரு மாதத்திற்கு 1 டி.எம்.சி. வரை தேவைப்படுவ தால் தற்போதைய நிலையில் அடுத்த 10 மாதத்திற்கு தேவை யான நீர் இருப்பு கைவசம் உள்ளது என்று நீர் வளத்துறை அதிகாரிகள் கூறினர்.