தந்தை பெரியார் 51ஆவது நினைவுநாள், “வெற்றி முழக்கம்” தமிழ்நாடு,கேரளா முதலைமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசு வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் விவரம் வருமாறு:
ஓசூர்
ஒசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கும் முன்பாக ஒசூர் விடியல் கலைக் குழுவினரின் பறையிசை சிறப்பாக நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பா ளர்களாக சி.பி.எம்.கட்சி மாவட்ட குழு செயலாளர் சி.சுரேஷ்,மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அ.ஜாகிர்ஆலம்,தமிழ் தேசகுடியரசு இயக்கம் மாவட்ட செயலாளர் விக்னேஷ், மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் முகமது உமர் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
வாழ்த்துரைக்குபின் தலைமைக்கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் கூட்டத்தின் நோக்கம் குறித்து தொடக்க வுரையாற்றினார்.தொடந்து திராவிடர் கழக மாநிலதுணை பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரையாற்றினார். அப்போது, தந்தை பெரியார் வைக்கம் சென்று நடத்திய ஜாதி தீண்டாமை ஒழிப்பு போரட்டத்தையும் அதனால் விளைந்த மனிதநேய பயன்களையும், திராவிடர் இயக்கத்தின் மக்கள் பணியினையும்,திராவிட மாடல் அரசு செய்து வந்துள்ள,வரும் சாதனைகளை விளக்கி 45 நிமிடம் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி தலைவர் செ.செல்வி, மகளிர் பாசறை மாவட்ட தலைவர் கோ.கண்மணி, மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, மாநகர தலைவர் து.ரமேஷ்,மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.டார்வின்பேரறிவு, மேனாள் சட்டக்கல்லூரி மாணவர் மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் க.கா.வெற்றி,மேனாள் மாவட்ட திராவிடர் தொழிலாளரணி செயலாளர் தி.பாலகிருஷ்ணன்,திமுக மாணவரணி ரஞ்சித்,ராஜா,ஒன்றிய அமைப்பாளர் பூபதி,ஈரோடு பாண்டியன், பொறியாளர் ரகுவரன், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொறியியல் ஓய்வு முருகேஸ்பாண்டியன், மக்கள் அதிகாரம் ரஞ்சித், நெல்லை குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கடவாசல்
மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 26-12-2024 அன்று மாலை சீர்காழி வட்டம், கடவாசலில் எழுச்சியுடன் நடைபெற்றது. கூட்டம் துவங்குவதற்கு முன்னர் தந்தை பெரியார் சிலைக்கும் அண்ணல் அம்பேத்கர் படத்திற்கும் மாலை அணிவிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு சீர்காழி திராவிடர் கழக ஒன்றியத் தலைவர் சா. சந்திரசேகரன் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்ட காப்பாளர் வீ.மோகன் முன்னிலை வகித்தார். சீர்காழி ப.க. செயலாளர் கவிஞர் வெண்மணி, வைத்தீசுவரன்கோயில் தலைவர் வி. ஆர்.முத்தையன், சீர்காழி வட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பாளர் இரவி ஆகியோர் துவக்க உரையாற்றினர்.
மாவட்ட தலைவர் குணசேகரன், மாவட்ட அமைப்பாளர் ஞான. வள்ளுவன் இருவரும் விரிவான உரையாற்றியபின் கழக பேச்சாளர் இராம. அன்பழகன் சிறப்புரையாற்றினார்.
உரையாற்றிய அனைவரும் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் இருவரும் ஆற்றிய சமுதாயத் தொண்டுகள், தந்தை பெரியாரின் வைக்கம் போராட்ட வரலாறு, அதன் நுாற்றாண்டை பெருமை படுத்தும் வகையில் வைக்கத்தில் இரு மாநில முதலமைச்சர்களாலும் திறந்து வைக்கப்பட்ட நினைவு இல்லம், நுாலகம் ஆகியவற்றின் சிறப்பு மற்றும் மூன்றாண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை பொது மக்கள் விரும்பி கேட்குமாறு விரிவாக எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில் மயிலாடுதுறை நகர கழக தலைவர் சீனி.முத்து, நகர துணைத் தலைவர் அரங்க. புத்தன், நகரச் செயலாளர் பூ.சி. காமராஜ், ஒன்றிய செயலாளர் அ. சாமிதுரை, மாவட்ட மகளிரணித் தலைவர் கோமதி செல்வம், மாவட்ட ப.க. தலைவர் தங்க.செல்வராசு, க. செல்வராஜ், விஜயா செல்வராஜ், மதிவாணன், கமலநாதன், கொள்ளிடம் நகர கழக தலைவர் பூ. பாண்டுரங்கன், கொள்ளிடம் ஒன்றியத் தலைவர் பாண்டியன், கடவாசல் ப.க. உறுப்பினர்கள் அறிவழகன், எம். திருஞானம், சுப்பு, இளவரசன், ரமேஷ், விஜயகுமார், இராசேந்திரன், கண்ணன், ராமகிருட்டிணன், பன்னீர்செல்வம், குபேந்திரன், பரமசிவம், மச்சகந்தன், இராமச்சந்திரன், முத்துக்குமார், நந்தன், குருசாமி ஆகியோருடன் ஏராளமான விவசாயத் தோழர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக சீர்காழி ஒன்றிய கழக செயலாளர் சா.ப. செல்வம் நன்றி கூறினார்.
இராசாக்கமங்கலம்
கன்னியாகுமரி மாவட்டம் இராசாக்கமங்கலம் ஒன்றியம் புத்தளம் சந்திப்பில் அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் 51 -ஆம் ஆண்டு நினைவு நாள், வைக்கம் வெற்றி முழக்கம் ,தமிழ்நாடு, கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல்அரசின் சாதனைகளுக்கு பாராட்டு! திராவிட முன்னேற்றக் கழக பவள விழா பொதுக்கூட்டம் குமரிமாவட்ட திராவிடர்கழகம், இராசாக்கமங்கலம் ஒன்றிய தி.மு.க சார்பாக ஒன்றிய திமுக செயலாளர் ஆ.லிவிங்ஸ்டன் தலைமையில் கழக காப்பாளர் ஞா. பிரான்சிஸ், மாவட்ட பகுத்தறிவாளர்கழக தலைவர் உ.சிவதானு ஆகியோர் முன்னிலையில்எழுச்சியோடு நடைபெற்றது .
புத்தளம் பேரூர் திமுக செயலாளர் எஸ். பிரதாப் சிங் வரவேற்று உரை யாற்றினார் கோட்டாறு கழகத் தலைவர் ச.ச. மணிமேகலை பொறுப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து உரையாற்றினார் மாவட்ட கழக செயலாளர் கோ. வெற்றி வேந்தன் தனது தொடக்க உரையில் வைக்கம் வெற்றி முழக்கம் என்ற தலைப்பில் தமிழர் தலைவர் 100 கூட்டங்களை தமிழ்நாடு முழுவதும் நடத்த சொல்லியிருப்பதன் நோக்கத்தை விளக்கியும், தந்தைபெரியாரின் கொள்கைகள் உலகமயமாகியிருப்பதையும் விளக்கி தொடக்க உரையாற்றினார்.
மாவட்ட கழக தலைவர் மா.மு .சுப்பிரமணியம் தமது உரையில், வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரோடு நாகர்கோயிலில் இருந்து பங்கேற்றுசிறைசென்றபெருமக்களின் பெயர்களை பட்டியலிட்டு பெருமைப் படுத்தினார் .
அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரின் தொண்டறம், வாழ்வியல் சிந்தனைகள் 18 -ஆம் பாகம் நூலினை அறிமுகம் செய்து திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குண சேகரன் உரையாற்றினார். ஒன்றிய திமுக செயலாளர் ஆ.லிவிங்ஸ்டன் நூலினை வெளியிட மாவட்டத்தலைவர் மா.மு.சுப்பிரமணியம், பேரூர் திமுக செயலாளர் எஸ்.பிரதாப்சிங், நாகர்கோவில் மாநகர கழக செயலாளர் மு.இராசசேகர், வழக்குரைஞர் பிரின்ஸ் ஆகியோர் நூலினைபெற்றனர்.
சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் நாகை இளமாறன் ஒரு மணி நேரம் 15 நிமிடம் தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு போராட்டத்தினையும், அவர் நடத்திய மனித உரிமை போரில் கிடைத்த வெற்றி யையும், தமிழர் தலைவர் ஆற்றிவரும் தொடர் தொண்டினையும், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், சமூகநீதியின் சரித்திர நாயகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகியோரின் தொடர் திராவிட இயக்க சாதனைகளையும், திராவிட மாடல் ஆட்சி 2026இல் தொடர வேண்டும் ஏன் என்பதை விளக்கியும் ஆற்றிய உரையினை பொதுமக்கள் கேட்டு கரவொலி எழுப்பி பாராட்டி மகிழ்ந்தனர்.
மாவட்ட கழகத் துணை தலைவர் ச. நல்ல பெருமான் நன்றிகூறினார்.கூட்டத்தில் மாவட்டக்கழக துணைச் செயலாளர் சி. அய்சக் நியூட்டன், மாவட்ட பகுத்தறிவு இலக்கிய அணி செயலாளர் பா .பொன்னுராசன், நாகர்கோவில் மாநகரத் தலைவர் ச.ச.கருணாநிதி மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ் .அலெக்சாண்டர், மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் க.யுவான்ஸ், தி.மு.க வழக்குரைஞர் அணி அமைப்பாளர் குமார சேரலாதன், புத்தளம் பேரூராட்சி தலைவர் சத்தியவதி, துணைத்தலைவர் பால் தங்கம், இரா.முகிலன் உள்ளிட்ட தோழர்களும் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய, பேரூர் கழக பொறுப்பாளர்களும் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
காரைக்குடி
காரைக்குடி கழக மாவட்ட சார்பில் 25.12.2024 அன்று தந்தை பெரியார் 51 ஆவது நினைவு நாள், வைக்கம் வெற்றி முழக்கம், தமிழ்நாடு கேரளா முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள் விளக்க பரப்புரைக் கூட்டம் காரைக்குடி, கல்லூரி சாலை ராஜிவ் காந்தி சிலை எதிரில் மாவட்டத் தலைவர் வைகறை தலைமையில், மாவட்டக் காப்பாளர் சாமி திராவிடமணி , ப.க மாவட்டத் தலைவர் துரை செல்வம் முடியரசன், மாவட்ட தி.க துணைச் செயலாளர் இ. ப.பழனிவேல், மாநகர தலைவர் ந. ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்வில் காரைக்குடி மாநகர திமுக செயலாளர், துணை மேயர் நா.குணசேகரன், ஏ.அய்.டி.யூ.சி. மாநில துணைத் தலைவர் பி.எல். இராமச் சந்திரன் , வி.சி.க சிவகங்கை வடக்கு மாவட்டச் செயலாளர் சி.சு. இளைய கவுதமன், மதிமுக சிவகங்கை மாவட்டச் செயலாளர் பசும்பொன் சி .மனோகரன் , காரைக்குடி இ.கம்யூ மாநகரச் செயலாளர் உ. சிவாஜிகாந்தி ஆகியோர் உரையாற்றினர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ஆறு. அழகப்பன் , பெரியார் படம் மற்றும் சிறையில் பூத்த சின்னச் சின்ன மலர்கள்” எனும் நூல்கலையும் அன்பளிப்பாக வழங்கினார்.
அவரின் தமிழ்ப் பணியை பாராட்டி மாவட்டக் கழகத்தின் சார்பில் பொன் னாடை அணிவித்து சிறப்பு செய்யப் பட்டது.
தொடர்ந்து தலைமைக் கழக அமைப்பாளர் கா.மா. சிகாமணி கருத் துரை வழங்கினார் .
சிறப்புரை நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பா.மணியம்மை சிறப்புரையாற்றினார்.
அவரது உரையில், ” நூறு ஆண்டுக்கு முன்பு இந்திய நாட்டில் நிலவிய தீண்டாமைக் கொடிய நோய் எங்கும் பரவியது. அதில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் நகரிலுள்ள கோவிலின் தெருக்களில் ஆடு, மாடு, பன்றி, மிருகங்கள் நடமாட லாம், ஆனால், தாழ்த்தப்பட்ட சமூக மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் நடமாடக்கூடாது என்ற கொடுமையைக் கண்டித்து, காந்தியாரின் ஆலோசனைப்படி அக்காலத்தில் (1924) தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக தந்தை பெரியாரைப் போராட்டம் நடத்த அனுமதித்து, மூன்று முறை சிறைப்பட்டார். அதன், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தேவஸ்தான நிர்வாகம் அனுமதித்தது.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸநாதனத்தை உடைத்தெறிந்து சமத்து வத்தை நிலைநாட்டிய முதன்மையான போராட்டம் வைக்கம் நிகழ்வு ஆகும்.
அதன் நூற்றாண்டு நிறைவு விழாவை, வெற்றி விழாவாக அண்மையில் (12.12.2024) வைக்கத்தில் தமிழ்நாடு அரசு அளித்த ரூ.8 கோடி நிதியில் மறுசீரமைக்கப்பட்டதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தமிழ்நாடு – கேரள , தமிழ்நாடு அமைச்சர்களுடன் திறப்பு விழா நடந்ததைப் பாராட்டியும், தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகளையும் விளக்கியும் உரையாற்றினார்.
ப.க மாவட்ட ஆலோசகர் விஞ்ஞானி சு.முழுமதி, கல்லல் ஒன்றிய செயலாளர் கொரட்டி வீ .பாலு, தொழிலாளர் அணி செயலாளர் சொ.சேகர், தேவகோட்டை ஒன்றிய செயலாளர் அ.ஜோசப், மாவட்ட ப.க அமைப்பாளர் த. பாலகிருஷ்ணன், மாவட்ட ப.க துணைச் செயலாளர் இரா முத்துலட்சுமி, மாவட்ட ப.க துணைத் தலைவர் கவிக்கோ அ.அரவரசன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றமாவட்ட அமைப்பாளர் குமரன் தாஸ், மாநகர கழக அமைப்பாளர் ஆ.பால்கி, கழக மகளிர் அணி அமைப்பாளர் இள.நதியா, பெரியார் பெருந்தொண்டர் த.திருமேனி, ஆலம்பட்டு பொன்சங்கு தமிழ்மாறன், இளைஞரணித் தோழர் சிறீதர், கார்த்திகேயன், முகிலன் ஆகியோர் பங்கேற்றனர், காரைக்குடி மாநகரத் கழக துணைத் தலைவர் ஆ. பழனிவேல் ராசன் நன்றி கூறினார்.