சென்னை,நவ.16 – வட்டார, பள்ளி மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வந்த குழந்தைகள் நாள் விழாவை, மாநில அளவில் நடத்த வேண்டும் என்ற முதலமைச்சர் உத்தரவின் படி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள அரங் கில் குழந்தைகள் நாள் விழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் (14.11.2023) நடந் தது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலை யத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பள்ளிக்கல்வித் துறை அமைச் சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி முன்னிலை வகித்தார். இதில் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன் உள்ளிட்ட பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் பங்கேற் றனர். நிகழ்ச்சியில் சிறந்த பள்ளி களாக தேர்வு செய்யப்பட்ட 114 பள்ளிகளுக்கு கேடயங்கள், பரிசு கள் வழங்கப்பட்டன.
அதேபோல், பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட 180 மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகள், சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் பேசியதாவது:-
முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு, ஒன்றிய அர சுக்கு வழிகாட்டும் பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை செய்கிறது. குழந்தைகள் நாளில் குழந்தைக ளுக்கு பரிசு அளிப்போம். ஆனால் அந்த குழந்தைகளை நல்ல நிலைக்கு உருவாக்கும் பள்ளிகளுக்கு பரிசு களை வழங்குகிறோம்.
சிறந்த பள்ளிகளை தேர்வு செய் வதில், வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படுகின்றன. அவ்வாறு தேர்வு செய்யப்படும் பள்ளிகள், தலைமை ஆசிரியர்களுக்கு பாராட் டுகள். சிறந்த பள்ளியாக தேர்வாக மாணவர்கள் நன்றாக படித்தால் மட்டும் போதாது. மற்ற பள்ளிக ளுக்கும் முன் மாதிரியாக திகழ வேண்டும். அப்படி திகழ்ந்து, கேட யம் பெறும் பள்ளிகளை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப் படும் பள்ளிகள் விளையாட்டுத் துறையிலும் சிறந்திருக்க வேண்டும். அந்த வகையில் இந்த 114 பள்ளி களில் இருந்து விளையாட்டு வீரர் களும் கிடைக்க இருக்கிறார்கள். அதன் மூலமும் மகிழ்ச்சி அடை கிறேன்.
உடற்கல்வி பாடவேளைகளை கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் கடன் வாங்காதீர்கள். மாணவ-மாணவிகள் விளையாடுவதற்கு வாய்ப்பை கொடுங்கள். முடிந்தால், கணிதம், அறிவியல் பாடவேளை களை உடற்கல்வி வகுப்புக்கு கடன் கொடுங்கள்.
கல்வி என்பது வெறும் பாடப் புத்தகத்தை மட்டும் படிப்பது அல்ல. புத்தகத்துக்கு வெளியிலும் கற்கவும், படிக்கவும் வேண்டியிருக்கிறது. அதற்கு உதாரணமாகத் தான் இப்போது பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை பெற்றிருக் கிறீர்கள். உங்கள் திறமைக்கு என் னுடைய வாழ்த்துகள்.
மாணவர்களாகிய உங்களை மட்டுமல்ல, உங்கள் பெற்றோரையும் சிந்திக்கின்ற அரசுதான், திராவிட மாடல் அரசு. அதனால்தான் பள்ளி களில் காலை உணவு வழங்கும் திட் டத்தை முதலமைச்சர் அறிமுகப் படுத்தினார். இந்த திட்டம் ஒன் றிய அரசை திரும்பி பார்க்க வைத் துள்ளது. தற்போது இதனை பின் பற்றி தெலுங்கானா மாநிலத்திலும் தொடங்கியிருக்கிறார்கள்.
சமீபத்தில் வெற்றிகரமாக சென்ற சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற் றிய விஞ்ஞானிகள் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள். அவர்களை முதலமைச்சர் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங் கினார். இதுபோல அரசுப் பள் ளிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவர்களும் சிறந்த சாதனையா ளர்களாக வரவேண்டும். அதற்கு தி.மு.க. அரசும், முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறையும் என்றென்றும் துணைநிற்கும்.
-இவ்வாறு அவர் பேசினார்.