சென்னை, டிச 29- தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கு .தியாகராஜன்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சார்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் பணிபுரிந்து வரும் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் அ.ரகமதுல்லா என்பவரை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளராக நியமித்து அறிவிப்பை வெளியிட்டார்.
மதுரை காமராஜர் பல்கலைக் கழக தொல்காப்பியர் அரங்கில் கடந்த ஞாயிறு அன்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மதுரை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மாநில அமைப்பு செயலாளர் செ.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் அருகாமை மாவட்டமான புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் சங்க பணிகளில் சிறப்பாக செயலாற்றி வரும் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி அறிவியல் ஆசிரியரும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செய்தித் தொடர்பாளராகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வரும் ரகமதுல்லா வை அவரின் பணிகளை பாராட்டி அங்கீகரிக்கும் விதமாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளராக பணியாற்றுவார் என்று அறிவித்தார்.