திருச்சி, டிச.29 திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் இரண்டு நாள்களாக – டிசம்பர் 28, 29இல் (சனி – ஞாயிறு) இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13ஆம் தேசிய மாநாட்டை, தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகம் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.
நேற்று (டிசம்பர் 28) மாநாட்டின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடந்தேறின. தொடக்க விழாவில் திராவிடர் கழகத் தலைவர் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
தமிழர் தலைவருக்கு விருது
தொடக்க விழாவில் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு, தெலங்கானா மானவ விகாச வேதிகா – பகுத்தறிவாளர் அமைப்பின் சார்பாக 2024 ஆம் ஆண்டுக்கான ‘தேசிய மனிதநேயர் விருது’ வழங்கப்பட்டது. விருதுப் பட்டயத்துடன் ரூ.10,000த்துக்கான விருதுத் தொகையினை மானவ விகாச வேதிகா அமைப்பின் தலைவர் பி.சாம்பசிவராவ் மற்றும் பொறுப்பாளர்கள் சேர்ந்து ஆசிரியர்
கி.வீரமணி அவர்களுக்கு வழங்கினர்.
விருதுத் தொகையினை தமிழர் தலைவர்
‘பெரியார் உலகத்திற்கு’ வழங்கினார்
விருதுத் தொகை ரூ.10,000–க்கான காசோலையினை திருச்சி – சிறுகனூரில் அமைக்கப்பட்டு வரும் ‘பெரியார் உலகத்திற்கு’ தமிழர் தலைவர் வழங்கினார்.