ஈரோடு கருங்கல்பாளையம் தமிழாசிரியர் மே. அ.கிருட்டிணன் (வயது 90) நேற்று (27.12.2024) காலை மறைவுற்றார். ‘எவ்வித சடங்கு சம்பிரதாயங்களும் இல்லாமல் தி.க. கொடியையும், கம்யூனிஸ்ட் கொடியையும் எனது உடல் மீது போர்த்துங்கள்’ என்று அவரது குடும்பத்தாரிடம் சில நாட்களுக்கு முன்பே கூறியுள்ளார். அதை பதிவும் செய்துள்ளார். அதன்படியே ஈரோடு மின்மயானத்தில் அவரது உடல் எரியூட்டப்பட்டது. இந்நிகழ்வில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த. சண்முகம்,ஸ்டாலின் குணசேகரன், மேனாள் கவுன்சிலர் ராதாமணி பாரதி, ஆகிய முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மே.அ.கிருட்டிணன் அவர்கள் “உண்மை” இதழில் தொடர்ந்து எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வள்ளியம்மாள் என்ற இணையரும், மகள் வழக்குரைஞர் பூங்கோதை, மகன் தாமரைச்செல்வன் ஆகியோரும் உள்ளனர். தொடர்புக்கு: 6383263813 / 6381368871