கோவிந்தகுடி கிளை செயலாளராகவும், ஒன்றிய அமைப்பாளர், ஒன்றிய தலைவர், மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியாளர் எனவும், ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் டில்லியில் நடந்த இட ஒதுக்கீடு போராட்டம், காவிரி நீருக்கான போராட்டம் என கழகப் போராட்டங்கள் அனைத்திலும் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்ற நா.சந்திரசேகரன் (வயது 73) 26.12. 2024 அன்று அதிகாலை உடல் நலக்குறைவால் மறைவுற்றார். அவரது இரு கண்களும் கவித்தலம் பெரியார் சேவை மய்யம் மூலம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு விழிக்கொடையாக வழங்கப்பட்டது.