பிள்ளை பெறும் வாய் சின்னதாக இருப்பதாலும், வயிற்றில் உள்ள குழந்தைகள் குறுக்கே வளர்ந்து விட்டதாலும், பிறப்பு தடைப்பட்டுச் செத்துப் போன தாயும் பிள்ளையும் அதிகமிருந்தது. ஆனால் தற்போது, பிள்ளை பெறும் துவாரத்தைக் கிழித்துப் பெரியதாக்கியும், வயிற்றைக் கிழித்தும் எடுத்த பிள்ளைகள் உயிரோடு பிறந்து நன்றாய் எப்படி வளர்கின்றன? இவைகளுக்கெல்லாம் விஞ்ஞான முறையில் (அறிவுச் சிந்தனை முறையில்) காரணங்கள் இருக்கின்றனவல்லவா? இல்லையா? இந்த விவரங்களைச் சரிவர அறியாத மக்கள் பிள்ளை பெறுவதெல்லாம் கடவுள் செயல் என்று நம்புவது அறிவுடைமை ஆகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’