ஆத்தூர், டிச. 28- ஆத்தூரில் திராவிடர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியாரின் 51 ஆவது நினைவுநாள் – வைக்கம் வெற்றி முழக்கம் – தமிழ்நாடு கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி – திராவிட மாடல் அரசின் சாதனைவிளக்க பொதுக்கூட்டம் 24.12.2024 அன்று மாலை மணிக்கூண்டு அருகே நடைபெற்றது.
சிறப்புரை
இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் த. வான வில் தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் நீ. சேகர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட காப்பாளர் இரா. விடுதலை சந்திரன், பெரியார் அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம், இரா. மாயக்கண்ணன் பக தலைமை கழக அமைப்பாளர், நகர தலைவர் வெ.அண்ணா துரை, ப. வேல்முருகன், மாநில இளைஞரணி துணை செயலாளர், வழக்கறிஞர் ஆ. சத்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆத்தூர் அ. சுரேஷ் தலைமை கழக அமைப்பாளர், வா. தமிழ்பிரபாகரன் பக மாநில ஆசிரியரணி பொதுச்செயலாளர் ஆகியோர் தொடக்கவுரை நிகழ்த்தினார்.
தஞ்சை இரா. பெரியார் செல்வம் சிறப்பான உரையை மக்கள் மத்தியில் எழுச்சி உரையாக ஆற்றினார்.
இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர் களாக பாலசுப்பிரமணியம் (திமுக நகரசெயலாளர்),
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பு துறை பொறுப்பாளர் ஓசுமணி, மதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் கோபால் ராஜ், விசிக நகர பொறுப்பாளர் மூ.க.செல்வம், சிபிஎம் தாலுகா பொறுப் பாளர் ஈ.ஆர்.கே.ராமகிருஷ்ணன், மஜக மாவட்ட பொறுப்பாளர் ரஹிமான் என அனைத்து கட்சி நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டார்கள்.
பங்கேற்றோர்
திராவிடர் கழக தோழர்கள் நரசிங்கபுரம். சைக்கிள் கடை மணி, நல்லசிவம் மருதபழனிவேல் தண்டபாணி, பக மாவட்ட தலைவர் வ.முருகானந்தம், பக மாவட்ட செயலாளர் அ. அறிவுசெல்வம், ச.வினோத் குமார் , கா. பெரியசாமி , அருண், ஆனந்த திராவிடன், ஆத்தூர் ஆ. செல்வம் கார்முகிலன், வேப்பம்பூண்டி இளங்கோ, கூ. செல்வம், தங்கராசு, ரமேஷ், விஜய்ஆனந்த், நீதிமான், மாணவரணி செயலாளர் ச. அஜித்குமார் சுனில் செல்வம் மற்றும் இன்னும் திரளான புதிய புதிய தோழர்கள் கலந்து கொண்டனர். அதேபோல பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வரலாறு செய்திகளை செவி மடுத்து கேட்டு உற்சாகமடைந்தனர்.