ஒழுக்கக் கேட்டிற்கு இதுவரை காரணமாக இருந்தவைகளை, ஒழுக்க வளர்ச்சிக்குப் பயனில்லாமல் இருக்கின்றவைகளை ஒழித்துவிட்டு, ஒழுக்கப் பிரச்சாரமும், ஒழுக்க ஈனராய், துரோகிகளாய் இருப்பவர்களை ஒழிக்கும் பிரச்சாரம் செய்ய வேண்டியதுதான் தனக்கென வாழாதவர்களுக்கு முக்கியமும் முதன்மையுமான கடன் என்றே கருதுகிறேன். ஒழுக்கமும் அன்பும் இல்லையானால் மனித சமுதாயமே வேண்டாம் என்று தோன்றுகிறது”