அகில இந்திய 13 ஆவது பகுத்தறிவாளர் கழக மாநாட்டிற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் பயனாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி மரியாதை செய்தார். தொடர்ந்து அகில இந்தியப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நரேந்திர நாயக் அவர்களுக்கு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி சிறப்பு செய்தார். அகில இந்தியப் பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் சுடேஷ் கோதேராவ் அவர்களுக்குத் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திமுக செய்தித் தொடர்புத்துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு இரா.தமிழ்ச்செல்வன், பொத்தனூர் க.சண்முகம் அவர்களுக்கு நரேந்திர நாயக், மாநிலங்களவை உறுப்பினர் மு.சண்முகம் அவர்களுக்குப் பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் வி.மோகன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு, இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் பயனாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி சிறப்பு செய்தனர்.
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து மாநாட்டிற்கு வருகை தந்த பேராளர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி சிறப்பு செய்தார். (திருச்சி – 28.12.2024)