திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழகம் என நமது இயக்கத்தில் ஈடுபாட்டுடன் பல ஆண்டு காலம் உழைத்தவரும், தொடர்ந்து லால்குடி பகுதியில் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பணிகளில் ஈடுபட்டு வந்தவரும் பின்னர் சொந்தக் காரணங்களால் ஒதுங்கிக் கொண்டவருமான நண்பர் லால்குடி முத்துச்செழியன் பி.ஏ. (வயது 93) அவர்கள் இன்று (27.12.2024) காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்; அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் தண்டிக்கப்பட்டுச் சிறையேகியவர்.
அவரது துணைவியார், மகன், மகள்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் நமது ஆறுதலையும், மறைந்தவருக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்