அரசு திட்டப் பணிகள் சரியாக செயல்படுகின்றனவா? கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் தமிழ்நாடு அரசு ஆணை

2 Min Read

சென்னை, ஜூலை 21 – தமிழ் நாடு அரசின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளை மாவட்டங்கள் தோறும் கண்காணிக்க அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். அந்த கண் காணிப்பு அதிகாரிகள் மற்றும் துறை செயலர்கள் கூட்டம் சமீபத்தில் நடை பெற்றது.

மேலும், ஜூலை 19ஆம் தேதி முதல் கண் காணிப்பு அதிகாரிகள் மாவட்டம் தோறும் ஆய்வு நடத்த வேண்டும் என்று தலை மைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டி ருந்தார்.

இந்நிலையில் தலை மைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப் பட்டு இருப்பதாவது:-

ராமநாதபுரம், திருப் பத்தூர், திருப்பூர் மாவட் டங்களுக்கு கண்கா ணிப்பு அதிகாரிகள் இல்லை என்பதால் புதிய அதிகா ரிகள் நியமிக்கப்படுகின்ற னர். அதன்படி, ராமநாத புரம் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவல ராக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அர்ச் சனா பட்நாயக்; திருப்பத் தூருக்கு வேளாண்துறை சிறப்பு செயலாளர் நந்த கோபால்; திருப்பூருக்கு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ள னர்.

இவர்கள் அந்தந்த மாவட்டங்களில் நீர் பாதுகாப்பு, குடிமரா மத்து, தடுப்பணைகள் கட்டுதல், குளங்கள், ஊர ணிகள், கோவில் குளங் கள், சிறுபாசன ஏரிகள் மற்றும் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பாசன ஏரிகள் ஆகியவற்றை கண்கணிப் பார்கள். ஆக்கிரமிப்பு களை அகற்றி நீர்நிலை களை மீட்டுருவாக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளை பொதுமக்கள் பங்களிப்புடன் மேற் கொள்வார்கள்.

அரசின் முத்திரைத் திட்டங்களை விரைவாக அமலுக்கு கொண்டு வருவது, நிலுவையில் உள்ள அதிக அளவிலான பட்டா மாற்றப் பணி களை கண்காணித்தல், பொதுமக்கள் குறை களை தீர்ப்பதற்கான நட வடிக்கைகளை எடுக்க வேண்டும். கட்டிடங்க ளில் விதிமீறல்கள், புறம் போக்கு பகுதிகளில் ஆக் கிரமிப்புகள் அகற்றுதல் உள்பட பல்வேறு பணி களை கண்காணிப்பார் கள்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் சாலை, குடிநீர், தெரு விளக்கு, கழிப்பறை உள் ளிட்ட வசதிகளை ஏற் படுத்துவதுடன், பிளாஸ்டிக் தடையை அனைத்து பகுதிகளிலும் அமல்படுத்துவதை கண்காணிப்பார் கள். 

பள்ளிகள், சத்துணவு மய்யங்கள், அங்கன்வாடி களில் குடிநீர், மின்வசதி, கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தும் பணியையும் கண்காணிப்பார்கள்.

-இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *