‘‘புத்தரின் சிரிப்பும் அமைதியான தோற்றமும், அவற்றின் மூலம் தரப்படும் நேர்மறை ஆற்றலும் மிகுந்த நம்பிக்கையை உருவாக்குகின்றன. வீட்டில் இந்த சிலையை வைப்பதால் செல்வம், நிம்மதி மற்றும் அதிர்ஷ்டத்தை ஈர்க்க முடியும் என்கிறார்கள்.
சமூகத்தில் பவுத்த மதம் மட்டுமல்லாது, பல்வேறு கலாச்சாரங்களில் புத்தர் சிலைகளுக்கு தனியான இடமுள்ளது. குறிப்பாக, சீன ஃபெங்சுயி கோட்பாட்டில் சிரிக்கும் புத்தர் சிலை செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இது குடும்பத்திற்குள் மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் நிலைநிறுத்த உதவுகிறது.
சில முக்கிய நன்மைகள்: சிரிக்கும் புத்தர் சிலையை வைப்பதற்கு வாஸ்து மற்றும் ஃபெங்சுயி கொள்கைகளின் அடிப்படையில் சில குறிப்புகள் உள்ளன:
தென்கிழக்கு திசை: செல்வத்தின் திசையாக கருதப்படும் தென்கிழக்கு திசையில் புத்தர் சிலையை வைப்பது அதிகமான வருமானத்தை ஈர்க்கும். மேலும், எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கும்.
கிழக்கு திசை: கிழக்கு திசை வீட்டின் நிம்மதி மற்றும் சமாதானத்திற்கான திசையாக கருதப்படுகிறது. சிரிக்கும் புத்தரை இங்கு வைப்பதால் குடும்பத்தில் சண்டைகள் மற்றும் பிரச்சினைகள் விலகும்.
சிறந்த இடங்கள்: சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டு வாஸ்து விதிகளுக்கு ஏற்ப சரியான இடத்தில் வைத்து பராமரிப்பது, செல்வம் மற்றும் அமைதியுடன் ஒரு குடும்ப வாழ்க்கையை செழுமைப்படுத்த உதவும். இந்த சிலையின் சிரிப்பு மட்டுமல்லாமல் அதன் மூலம் தரப்படும் நேர்மறை ஆற்றலும் உங்கள் வீட்டில் ஒரு புதிய அமைதியை உருவாக்கும்.
சிரிக்கும் புத்தர் சிலையின் மகத்துவத்தை உணர்ந்து, அதை உங்கள் வீட்டின் ஒரு பகுதியாக ஆக்குங்கள். உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் செழிப் பாகவும் இருக்க உதவுமென்பது நிச்சயம்!’’
இப்படியாக ஓர் இணையத்தில் சரடு விடப்பட் டுள்ளது.
(செய்திப்புனல் இணையம்)
புத்தி உள்ளவன் புத்தன் என்றார் தந்தை பெரியார். கதவுமப் புத்தர் கடவுளையோ, ஆன்மாவையோ, வருணங்களையோ, அவற்றைக் கட்டிக் காக்கும் வேதங் களையோ ஏற்றவரில்லை. அவரால் உண்டாக்கப்பட்டது ஒரு நெறிேய மார்க்கமே தவிர, மதமல்ல!
பார்ப்பனீயம் புகுந்து மார்க்கத்தை மதமாகச் சிதைத்து விட்டது! பார்ப்பனர்கள் ஓர் அமைப்பின் உள்ளே நுழைந்தால் என்ன செய்வார்கள் என்பதற்கு அத்தாட்சியே புத்த மார்க்கம் மதமானதாகும்.
அயோத்தியில் ராமன் கோயிலைச் சுற்றியுள்ள சுவர்களில் மகாவிஷ்ணு அவதாரங்களின் பட்டியலில் புத்தரையும் செதுக்கியுள்ளனர் என்பது
எத்தகைய பித்தலாட்டம்!
புத்தருடைய சுற்றுப் பயணத்தில் பலரும் பல கேள்விகளைக் கேட்பார்கள் – அவற்றிற்கெல்லாம் பொறுமையாகப் பகுத்தறிவின் அடிப்படையில் சிந்திக்கத் தூண்டும் வகையில் பதில் அளிப்பார் கவுதமப் புத்தர். எடுத்துக்காட்டுக்கு இதோ ஒன்று:
‘‘பார்ப்பனர்கள் ‘பிரம்மா’ என்றும் ‘ஈசன்’ என்றும் ஒருவர் பற்றிச் சொல்லுகிறார்களே? அவர்கள் பற்றித் தங்கள் கருத்தென்ன?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
புத்தரின் பதில்: “உலகம் பிரம்மனாலோ, ஈசுவர னாலோ படைக்கப் பட்டிருந்தால் மக்களுக்குக் கவலைகளும், தொல்லைகளும் ஏற்பட்டிருக்காது. நன்மை, தீமை இரண்டுமே அவர்களிடத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டும். அவை உண்மையானால் அவர்களைவிட மோசடிக்காரர்கள் எவருமே இல்லை என்பேன். பிரம்மன், ஈசுவரன் என்ற எண்ணத்தைத் தூக்கி எறியுங்கள்”.
மனிதனுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி இருப்ப தாகவும் அதைப் போற்றி வணங்கவேண்டுமென்றும் பார்ப்பனர்கள் சொல்லித் திரிகிறார்களே” என்று சிலர் கேட்டபோது புத்தர் சொன்னது.
‘‘வாதத்திற்காக அதை ஏற்றுக் கொள்ளுவோம்! பிக்குவே, நீ ஒரு ஆற்றைக் கடக்க வேண்டியுள்ளது. அதைக் கடப்பதற்கு அருகிலுள்ள வேலுவனத்தில் வேல் களை (மூங்கில் காட்டில் மூங்கில்களை) வெட்டித் துண்டுகள் செய்து, அவைகளை இணைத்து பாசத்தால் (கயிற்றால்) கட்டித் தெப்பம் செய்து, அதனைக் கொண்டு ஆற்றைக்கடக்கின்றாய். ஆற்றைக் கடக்கத் துணையாக இருந்த அத்தெப்பத்தை எடுத்து கரையில் வைத்துவிட்டு “என்னை ஆற்றின் அக்கரையிலிருந்து இக்கரை சேர்த்த’ வேலனே (மூங்கிலே)” என்று போற்றுவாயா? வேண்டு மானால் வேறு எவருக்காவது அது பயன்படட்டும் என்று நினைத்துக் கரையிலுள்ள ஒரு மரத்தில் அக்கட்டு மரத்தைக் கட்டிவைத்துவிட்டுச் செல்லலாம். அதுவே அறிவுைடமை. பிறர் நலம் பேணுவதாகும்”
எடுத்துக்காட்டுக்கு இது ஒன்று; புத்தருடைய போதனைகள் ஒவ்வொன்றும் சிந்தனையின் அடிப் படையில் ஊற்றெடுப்பவை.
எதையும் தன் வயப்படுத்தி அழித்தொழிப்பது ஆரியத்தின் அணுகுமுறை – அதில் அறிவியல் இணையங்களும் பலியானதுதான் வெட்கக் கேடு!