27.12.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஜாதிவாரி கணக்கெடுப்பு, தென்னக மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத தொகுதி வரையறை குறித்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் முன்மொழிந்த தீர்மானங்களை காங்கிரஸ் மத்திய காரிய கமிட்டி ஏற்றது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘டில்லியில் ஆட்சியில் இருப்பவர்களால் காந்தியாரின் மரபு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது’: காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசு மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) ஆகியவற்றிற்கு சோனியா காந்தி கடும் கண்டனம்
தி டெலிகிராப்:
* உ.பி., இடைத்தேர்தல்: தோல்வியடைந்த 6 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை தர வேண்டும், தேர்தல் ஆணையத்திடம் சமாஜ்வாடி கட்சி வேண்டுகோள்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* இந்த ஆண்டின் முதல் பாதியில் வங்கிகளில் நடைபெற்ற பண மோசடிகள் எட்டு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட தொகை கடந்த ஆண்டு ரூ.2,623 கோடியில் இருந்து 21,367 கோடியாக உயர்ந்துள்ளது.
.- குடந்தை கருணா