ஒழுக்கத்தின் விரோதி
நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களின் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும் மூடநம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாயிருக்கிறது.
முன்னேற்றஉணர்ச்சி ஏற்பட
ஒரு நாட்டு மக்களுக்கும், சமுதாய மக்களுக்கும் முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அந்த மக்களுக்கு முதலில் தாங்கள் யார் என்ற உணர்ச்சி பிறந்து, தங்களைப் பற்றித் தெளிவாய்த் தெரிந்து கொண்டு அதன் பயனாக, நாட்டுப் பற்றும் சமுதாயப் பற்றும் ஏற்பட்டாக வேண்டும்.
பகுத்தறிவு வளர்ந்தால்
மக்களுக்கு அறிவும் – ஆராய்ச்சியும் வளர, வளர கடவுள் உணர்ச்சியின் அளவும் குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம். அது போலவே அறிவும் – ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.