ஈராயிரமாண்டு இழிவுகளைக் கொளுத்தி – திராவிடக் கருத்தியலால் சுயமரியாதை ஊட்டி, தமிழினம் தலைநிமிரச் செய்த தந்தை பெரியாரின் கைத்தடி நம் நிலத்தை – இனத்தை என்றும் காக்கும்! அந்தக் கைத்தடியை எனக்குப் பரிசாக அளித்து நெகிழச் செய்துவிட்டார் மானமிகு ஆசிரியர் அவர்கள்! பெரியாரியப் பெருந்தொண்டுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட மானமிகு ஆசிரியர் அவர்கள், பகுத்தறிவுச் சுடரை ஏந்திப் புத்தொளிப் பாய்ச்சும் பணியில் நாளும் ஈடுபட்டு வருகிறார். 1935-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘விடுதலை’ ஏட்டின் பிரதிகள் உள்ளிட்ட பல்வேறு நூல்களைத் தாங்கி திராவிட இயக்க அறிவுக் களஞ்சியமாக உருவாகியுள்ளது, பெரியார் எணினி நூலகம் – பெரியாரியக் கருத்துகளை அனைத்து மக்களிட மும் கொண்டு சேர்க்கும் அறிவுப் பணியைத் தொடர்வோம்!
எங்கும் பகுத்தறிவுத் தீ–பரவட்டும்!
– சமூகவலைதளப் பதிவு