2004 ஆழிப்பேரலையின் 20ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று. சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் பேரின் உயிரைக் குடித்த சுனாமி தமிழ்நாட்டு கடற்கரையையும் தாக்கியது.
2004ஆம் ஆண்டு இதேநாளில் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக வியட்நாம், மியான்மர், இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளை சுனாமி தாக்கியது. இந்த நாள் உலக வரலாற்றில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கறுப்பு நாளாக பதிவாகியிருக்கிறது.
ஜனவரி 1 முதல் வரும் மாற்றங்கள்
* ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் கேஸ் சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படும். அந்த வரிசையில் இந்த ஜனவரி 1ஆம் தேதி மாற்றம் வரலாம்.
* பங்குச்சந்தை Options Expiry தேதிகளை NSE மாற்றியுள்ளது.
GST செலுத்தும் அனைவருக்கும் MFA (Multi Factor Authentication) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
* பங்குச்சந்தையில் ITC நிறுவனத்தில் இருந்து ஓட்டல் தொழில் தனியாக பிரிகிறது.
* பழைய ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் வாட்ஸாப் இயங்காது.