சென்னை, டிச.26- பழைய வாகனத்தை விற்றால் 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி அவ்வளவு சுமையல்ல என்று நிதியமைச்சர் விளக்கம் அளித்தார்.
நிதி அமைச்சரின் விளக்கத்தால் சிரிப்பு வருகிறது என மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:
“பழைய வாகனத்தை விற்றால் 18% ஜி எஸ் டி என்ற புதிய வரி விதிப்பைப் பெரும்பான்மையான வாகன உரிமையாளர்கள் எதிர்க்கிறார்கள்.
அரசுக்கு எதிராக கோபம் வருகிறது. இந்த வரி அவ்வளவு சுமையல்ல என்று நிதியமைச்சர் விளக்கம் அளித்தார்.
இந்த விளக்கத்தைப் பார்த்த பிறகு அரசுக்கு எதிராகச் சிரிப்பு வருகிறது
நிதி அமைச்சர் தம்முடைய கணக்குப் பாடத்தைப் பள்ளிக் கணக்குப் புத்தகங்களில் சேர்ப்பதற்கு முன்னால் தம்முடைய கணக்குப் பாடத்தை விலக்கிக் கொள்வார் என்று நம்புகிறேன்
‘குதிரை கீழே தள்ளியது மட்டுமல்ல, குழியும் பறித்ததாம்’ என்ற பழமொழி என் நினைவுக்கு வந்தது” என தெரிவித்துள்ளார்.