பேரன்புடையீர், வணக்கம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்தமான தமிழ்நாட்டில் அப்பழுக்கற்ற பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான – தமிழ்நாடு அரசால் “தகைசால் தமிழர்” என்ற பெருமைக்குரிய தாங்கள் நூற்றாண்டு காண்பது கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.
வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் நேரில் வந்து தங்களை வாழ்த்த முடியாத நிலைக்கு வருந்துகிறேன்.
பொதுவுடைமை இயக்கத்தில் தாங்கள் கடந்து வந்தது மலர் பரப்பப்பட்ட பாதையல்ல – கல்லும் முள்ளும் கனலும் நிறைந்த கரடுமுரடான காட்டாற்றுப் பாதை.
தலைமறைவான வாழ்க்கை – சித்திரவதைக்கு ஆளான சிறை வாழ்க்கை என்று விரிந்து கொண்டே போகும்! கட்சிகளைக் கடந்து தமிழ்நாட்டில் வாழும் மூத்த தலைவரான தாங்கள் நல்ல உடல் நலத்துடன், மேலும் நீண்ட காலம் வாழ்ந்து கட்சிக்கும் நாட்டுக்கும் வழி காட்ட வேண்டும் என்று உளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வணக்கம்!
தங்கள்
(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்