தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தோ்ச்சி நடைமுறை தொடரும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

1 Min Read

சென்னை,டிச.24- ‘தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பு வரையிலான கட்டாய தோ்ச்சி முறையில் எந்தவித மாற்றமும் இருக்காது’ என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். இது தொடா்பாக அவா் நேற்று (23.12.2024) வெளியிட்டுள்ள அறிக்கை:

தடையில்லை

தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் தொடா்ந்து தடையின்றி கல்வி பயின்றிட ஏதுவாக, எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தோ்ச்சி வழங்கப்படும் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளைத் திருத்தம் செய்து, 5, 8-ஆம் வகுப்பு தோ்வுகளில் தோ்ச்சி பெறாத குழந்தைகளுக்கு 2 மாதங்களில் மறுதோ்வு முறையையும், அதிலும் தோ்ச்சி பெறாத குழந்தைகள் அதே வகுப்பில் ஓராண்டு பயில வேண்டும் என்ற முறையையும் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.

மாநிலக் கல்விக் கொள்கையே

ஆனால், தமிழ்நாட்டில் மாநிலக் கல்விக் கொள்கை தொடா்ந்து பின்பற்றப்படும் சூழ்நிலையில், ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஒன்றிய அரசுப் பள்ளிகளைத் தவிர பிற பள்ளிகளுக்குப் பொருந்தாது.
எனவே, ஒன்றிய அரசின் கல்வி உரிமைச் சட்ட விதிகள் குறித்து பெற்றோரும் மாணவா்களும் எந்தவகையிலும் குழப்பமடையத் தேவையில்லை. தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில், தற்போதுள்ள தோ்ச்சி நடைமுறையே தொடரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *