23.12.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு திமுக தலைமை செயற்குழு கண்டனம்.
* குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் ஒருவரை பல ஆண்டுகள் சிறையில் அடைப்பது என்பது, வழக்கு விசாரணை இல்லாமலேயே தண்டனை தருவதாகும் – உச்சநீதிமன்றம் கண்டனம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தேர்தல் விதிகளில் மாற்றம் என்பது தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை அழிக்கும் சதியின் ஒரு பகுதி என காங்கிரஸ் குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒரு வரலாற்று நடவடிக்கையாக, கேரள மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (KSPCB) மற்றும் திருவனந்தபுரம் கார்ப்பரேஷன் உள்பட கேரள அதிகாரிகள், திருநெல்வேலி மாவட்ட கிராமங்களில் கேரளாவின் உயிரியல் மருத்துவம், பிளாஸ்டிக், உணவு மற்றும் பிற கழிவுகள் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட ஆறு இடங்களைப் பார்வையிட்டனர்.கேரள அதிகாரிகள் தமிழ்நாட்டின் கிராமங்களில் இருந்து கழிவுகளை தங்கள் மாநிலத்திற்கு கொண்டு செல்கின்றனர்
லைவ்-லா:
* ஒரு நகரம் மதம் சார்ந்தது என்று கூறி இறைச்சிக் கூடத்திற்கு அனுமதி மறுப்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது: போபால் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
தி டெலிகிராப்:
* ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை மக்களவையில் நிறைவேற்ற வாய்ப்பில்லை – காங்கிரஸ் தவைலர் திக் விஜய் சிங்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கில், அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்பு, 300 இந்தியர்களின் வாட்ஸ் அப் எண்கள் குறி வைக்கப்பட்டதை நிரூபித்துள்ளது என்றும், தீர்ப்பைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் இப்போது மேலும் விசாரணை நடத்துமா என்றும் காங்கிரஸ் கேள்வி.
.- குடந்தை கருணா