நாமும் காய்கறி அரிசி உணவைக் குறைத்துக் கொண்டு மாட்டு மாமிச உணவைத் தாராளமாகச் சாப்பிட வேண்டும். மலிவு விலையில் கிடைக்கக்கூடியதாக பெரிய பெரிய மாட்டுப் பண்ணைகளை ஏற்படுத்த வேண்டும். மாட்டு மாமிசம் தின்பது பாவம் ஆகுமா? அப்படியே பாவம் என்றாலும் கோழி தின்பதில் எவ்வளவு பாவமோ அவ்வளவு பாவம்தான் மாடு தின்பதிலும் ஆகும். நமது சாமிகளுக்கே மாடு, எருமை, கோழி, பன்றி முதலியனவற்றைக் காவு கொடுக்கும் போது – ஆசாமிகள் மாட்டிறைச்சி சாப்பிடுவதில் என்ன தவறு?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’