பட்டுக்கோட்டை, டிச. 23- 21.12.2024 சனிக்கிழமை அன்று நண் பகல் 11 மணி அளவில் பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் மாநில கழக இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி தலைமையிலும் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் அரு.நல்லதம்பி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வழக்குரைஞர் புலவஞ்சி இரா.காமராஜ், மேனாள் பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் முனைவர் பேராசிரியர் கரு.கிருட்டினமூர்த்தி, மாவட்ட கழக அமைப்பாளர் சோம.நீலகண்டன் ஆகியோர் முன்னிலையிலும், மாவட்ட கழக தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன், மாவட்ட கழக செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம் இவர்கள் கருத்துரையுடனும் நடைபெற்றது.
தீர்மானங்கள்
தந்தை பெரியார் அவர்களின் குடும்ப பேரன் காங்கிரஸ் பேரியக்க மூத்த தலைவர், சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மதுக்கூர் ஒன்றியம் கன்னியாகுறிச்சி கிருட்டினன், சுயமரியாதை சுடரொளி நாகை என். பி. காளியப்பன் மருமகளும் கழக ஆர்வலர் ஆதித்யன் பாட்டியுமான ஆதீஸ்வரி, கழகப் பொதுக்குழு உறுப்பினர் நீ.தேவி தந்தையார் செல்லையன், மதுக்கூர் அத்திவெட்டி செயக்குமார் ஆகியோரின் மறைவுக்கும் இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.
உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் தத்துவக் கொள்கை வாரிசு, நமது குடும்பத் தலைவர், விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் பெரும் மகிழ்வாக பெருமளவில் விடுதலை சந்தா வழங்குவது பெரியார் உலகத்திற்கு நிதி வழங்குவது என பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி சார்பாக தீர்மானிக்கப்படுகின்றது
பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி சார்பாக கிராமங்கள், நகரங்கள், பேரூராட்சி என அனைத்து பகுதிகளிலும் கழக இலட்சிய கொடியேற்றி புதிய கிளைக் கழகங்கள் அமைத்து கட்டமைப்பை உருவாக்குவது என தீர்மானிக்கப்படுகின்றது
நமது நோக்கங்கள் எல்லாம் பிரச்சாரம், பிரச்சாரம், பிரச்சாரம் அதன் அடிப்படையில் தொடர்ச்சியாக தெருமுனைப் பிரச்சாரம், துண்டு பிரச்சாரம், தகவல் பதாகை அமைத்தல், இல்லங்கள் தோறும் கழக கொடி பறக்க விடுவது எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கின்றது
வைக்கம் நூற்றாண்டு வெற்றி விழா, தந்தை பெரியார் அவர்களின் 51ஆவது நினைவு நாள், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு பாராட்டு, தமிழ்நாடு, கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி அறிவிக்கும் பெரும் திரள் கூட்டம் பட்டுக்கோட்டை கழக மாவட்டத்திற்கு தலைமை கழகம் அறிவித்துள்ள டிசம்பர் – 25ஆம் நாள் பட்டுக்கோட்டை, டிசம்பர் – 30ஆம் நாள் மதுக்கூரிலும் நடைபெறும் கூட்டத்திற்கு இளைஞர் அணி பொறுப்பாளர்கள், தோழர்கள் அதிக அளவில் கலந்து கொள்வது எனவும் இக்கூட்டம் முடிவு செய்கிறது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.அரவிந்த் குமார் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட கழக தொழிலாளர் அணி தலைவர் முத்து துரைராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மதுக்கூர் மாணிக்க சந்திரன், பேராவூரணி ஒன்றிய கழக தலைவர் மு.தமிழ்ச்செல்வன், மதுக்கூர் ஒன்றிய கழக தலைவர் புலவஞ்சி பெ.அண்ணாதுரை, அறந்தாங்கி ஒன்றிய கழக தலைவர் அத்தாணி நா.சிவசாமி, பேராவூரணி நகர கழக தலைவர் சி.சந்திரமோகன், பேராவூரணி நகர கழக செயலாளர் த.நீலகண்டன், மதுக்கூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் கருப்பூர் முருகேசன், பேராவூரணி ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் க.சசிகுமார் ஆகியோர் கலந்துகொண்டு தங்களது இயக்க செயல்பாடுகள் குறித்த கருத்துக்களை பதிவு செய்தனர். பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன் கூட்டத்தினை தொகுத்து வழங்கினார். கூட்டத்தில் புதிய தோழர்கள் கலந்து கொண்டனர்