இந்திய பகுத்தறிவாளர் சங்க மாநாட்டில் பெருமளவில் பங்கேற்போம்

Viduthalai
2 Min Read

கிருட்டினகிரி கழகப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

கிருட்டினகிரி டிச- 23. கிருட்டின கிரி மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் கிருட்டினகிரி பெரியார் மய்யத்தில் 21.12.2024 – சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் நடை பெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ. திராவிடமணி தலைமை வகித்துப் பேசினார்.
மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மாவட்ட விவசாயணி தலைவர் இல. ஆறுமுகம், மாவட்ட ப.க. துணைத் தலைவர் மு.வேடியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். கிருட்டினகிரிஒன்றியத் தலைவர் த.மாது அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், மத்தூர் ஒன்றியத் தலைவர் கி.முருகேசன், கிருட்டினகிரி ஒன்றியச் செயலாளர் கி.வேலன், நகரச் செயலாளர் அ.கோ. இராசா, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
நிறைவாக கிருட்டினகிரி நகர கழகச் செயலாளர் அ.கோ. இராசா நன்றி கூறினார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவரும் ஈரோடு சட்டமன்ற உறுப்பினருமான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்து இரண்டு மணி துளிகள் மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவிப்பை ஏற்று தலைமைக் கழகம் அறிவித் துள்ள தந்தை பெரியார் 51 – ஆவது நினைவுநாள் – வைக்கம் வெற்றி முழக்கம் – தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள்! தமிழர் தலைவர் ஆசிரியர் 92 -ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா – திராவிடர் கழகப் பொதுக் கூட்டம் கிருட்டினகிரி மாவட்டத்தில் வருகின்ற 27/12/2024- அன்று கிருட்டினகிரி தேவசமுத்திரத்திலும், 30/12/2024- அன்று காவேரிப்பட்டணம் மலையாண்டஅள்ளி புதூரி லும் நடத்துவது என தீர்மானிக்கப் படுகிறது.

இந்திய அரசியல் சட்ட மாமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரை இழிவாக பேசிய பாஜக ஒன்றிய அமைச்சர் அமித்சாவை வன்மையாக கண்டிப்பதுடன், ஒன்றிய அமைச் சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
உலக மனிதநேய மாண்பாளர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நினைவுநாள் டிசம்பர் 24-அன்று மாவட்டம் முழுவதும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுவது என தீர்மானிக்கப்படுகிறது.
திருச்சியில் வருகின்ற 28, 29 தேதிகளில் இந்திய பகுத்தறி வாளர் கூட்டமைப்பின் சார் பில் நடைபெறும் 13ஆவது மாநாட் டில் கிருட்டினகிரி மாவட்ட பகுத் தறிவாளர் கழக தோழர்களை பெரும் அளவில் பங்கேற்க செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *