ஒசூர் மாநகருக்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களை சந்தித்து ஒசூர் உள்வட்ட சாலை இணைப்பு பகுதிக்கு “தந்தை பெரியார் சதுக்கம்”பெயர் வைத்திட அனுமதி பெற்று தந்தமைக்காக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சிவந்தி அருணாசலம், மாவட்ட செயலாளர் செ.பேரரசன்,துணைத் தலைவர் வெ.ராமேஷ்வரன், மாநகர தலைவர் து.ரமேஷ், ச.எழில் நன்றி தெரிவித்துகொண்டு விரைவாக அந்த இடத்தில் தந்தை பெரியார் சதுக்கம் பெயர் பலகை வைத்திட வேண்டுமாய் கோரிக்கை மனு அளித்தனர்.
கன்னியாகுமரியில் இயக்க நூல்கள் பரப்புரை குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக இயக்க நூல்கள் பரப்புரை பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
கழக குமரி மாவட்ட தலைவர் மா. மு. சுப்பிரமணியம், மாவட்ட கழக செயலாளர் கோ. வெற்றிவேந்தன் ஆகியோரிடம் இருந்து திமுக இராசாக்கமங்கலம், ஒன்றிய செயலாளர் ஆ.லிவிங்ஸ்டன் கழக நூல்களைப் பெற்றுக் கொண்டார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, திராவிடர்கழக மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் இரா.கோகுல் உடனிருந்தனர்.
தந்தை பெரியார்
நினைவு நாள் கருத்தரங்கம்
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 452ஆவது வார நிகழ்வு 21-12-2024 மாலை 07-00 மணிக்கு கொரட்டூர், தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளை கழக அலுவலகத்தில் தந்தை பெரியார் அவர்களின் 51ஆவது நினைவு நாளில் அறிவொளி ஏற்றுவோம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன் 84ஆவது வட்ட தி.மு.க.செயலாளர் த.வ.லால் தலைமையில் நடைபெற்றது. பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் அவர்களின் 75ஆவது பிறந்த நாள் விழாவும் இணைந்து கொண்டாடப்பட்டது.தி.மு.க.தலைமை கழக பேச்சாளர்
மா.வள்ளிமைந்தன்,சு.தேவேந்திரகுமார்,சு.குணாளன்,அய்.சி.எப்.அசோகன், அரவிந்தன், பொன்னுரங்கம்,ஜனா, ஜெயப்பிரகாஷ், மோகன் ஆகியோர் உரையாற்றினர்.நிகழ்வில் சிவகுமார், ஜெயந்தி சிவகுமார், சுமதி மணி, உதயசூரியா, வழக்குரைஞர் பன்னீர்செல்வம், புஷ்பா, சீதா, அருமை நாதன், சாம் டேனியல், பிச்சை மணி, தமிழ் மதி, திராவிட பரிதி, உசேன், மீரான், தமிழ்ச்செல்வன், அருண், ரித்திக், சஞ்சய், குணசீலன், அப்பு, லோகேஷ், சாம்பிரகாஷ், கார்த்தி, பகலவன், குரு குமார், மோகன், டைசன், சசிகுமார், அரவிந்தன், நடராஜன், ஜீவா, க.இளவரசன், பூ.இராமலிங்கம், ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக கோ.அமரன் நன்றி கூறினார்.