மதுரை, டிச. 23- மதுரை பெரியார் மய்யத்தில் 15.12.2024 அன்று மாலை உற்சாகமாக நடைபெற்றது.
நிகழ்விற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் எ.செல்வப்பெரியார் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ.இராஜா அனை வரையும் வரவேற்றார். தலைமை கழக அமைப்பாளர் வே.செல்வம் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.
மாவட்ட காப்பாளர் தே.எடிசன்ராஜா, மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி, மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், மாவட்ட செயலாளர் இரா.லீ.சுரேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் பா.காசி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ச.வேல்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில இளை ஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி நிகழ்வின் நோக்கம் குறித்து பேசினார்.
மாநில செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் முனைவர் சுப. முரு கானந்தம், மாநில சட்டத்துறைச் செயலாளர் வழக்குரைஞர் மு.சித்தார்த் தன், மாநில சட்டத்துறை துணைச் செயலாளர் வழக்குரைஞர் நா.கணேசன், கழக சொற்பொழிவாளர் பேராசிரியர் சுப. பெரியார்பித்தன். ஆகியோர் சிறப் புரை ஆற்றினர்.
மாவட்ட துணை தலைவர் இரா.திருப்பதி, மாவட்ட துணை தலைவர் நா.முருகேசன், மாவட்ட துணை தலைவர், பொ.பவுன்ராஜ். அ.வேங்கைமாறன் திராவிடர் கழகம், மாவட்ட துணைச்செயலாளர் க.சிவா, மாவட்ட துணைச் செயலாளர்
தனுஷ்கோடி, மாவட்ட தலைவர் பகுத்தறிவாளர் கழகம் சா.பால்ராஜ், மாவட்ட செயலாளர் பகுத்தறிவாளர் கழகம் பழனிவேல்.ராஜன், தொழிலாளர் பேரவைத் தலைவர் கா. சிவகுருநாதன், எல்அய்சி செல்லகிருட்டிணன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றச்செயலாளர். நா.மணிகன்டன், மகளிரணி, த. ராக்கு தங்கம், க.நாகராணி மாவட்ட மகளிரணி அமைப்பாளர், அ.அல்லிராணி மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் தி.அஜிதா மகளிரணி.
பகுதிப் பொறுப்பாளர்கள்
சோ.சுப்பையா க.மணிராஜ், அ.அழகுப்பாண்டி, ஜேஎஸ்.மோதிலால், பேக்கரி கண்ணன், ஆட்டோ செல்வம், மு.மாரிமுத்து, பெரி.காளியப்பன், கோரா, புதூர் பாக்கியம், போட்டோ இராதா, வண்டியூர் கிருஷ்ணமூர்த்தி, பெத்தானியாபுரம் பாண்டி, தனசேகரன், கோகு.கணேசன் நல்லதம்பி, ந.இராஜேந்திரன், கான்ராக்டிர் சண்முகம்.முரளி, மசு.மோதிலா, பெரியார் பெருந்தொண்டர் பே.தேவசகாயம், அன்னத்தாயம்மாள், வழித்தோன்றல் நான்காம் தலைமுறை செ.தேவசன்பெரியார், அன்புமணி சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக மாவட்ட மாணவர் கழக செயலாளர் தேவராஜ் பாண்டியன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவரும், மேனாள் ஒன்றிய இணை அமைச்சரும், ஈரோடு சட்டமன்ற உறுப்பினரும் சுயமரியாதை வீரர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவிக்கிறது.
மதுரை மாநகர் மாவட்ட கழக இளைஞரணி சார்பாக நகரங்கள். ஊராட்சி, பேரூராட்சி, கிளைக் கழகங்கள், முழுவதும் கழக இலட்சியக் கொடியை ஏற்றியும் புதிய கிளைக் கழகம் அமைத்து கழக இளைஞரணியை புதுப்பிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.
மதுரை மாநகர் மாவட்டத்தில் கழக இளைஞரணி சார்பில் ஏராளமான இடங்களில் தகவல் பதாகை அமைத்தல், துண்டறிக்கை பிரச்சாரம் செய்தல், தெரு முனைப் பிரச்சாரம் செய்தல் பெரியார் பேசுகிறார் நிகழ்வினை தொடர்ச்சியாக நடத்துதல் என தீர்மானிக்கப்படுகிறது.
தந்தை பெரியாரின் தத்துவ கொள்கை வாரிசு தமிழர் தலைவர் நமது குடும்பத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக. உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளேட்டை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக மதுரை மாநகர் மாவட்ட கழக இளைஞரணி சார்பில் அதிக அளவில் சந்தாக்களை வழங்கிடவும். பெரியார் உலகத்திற்கு பெருமளவில் நிதி வழங்கிடவும் முடிவு செய்யப்படுகிறது.
டிசம்பர் 28,29, இரண்டு நாட்கள் திருச்சியில் நடைபெறும் உலக பகுத்தறிவாளர்களின் கூட்டமைப்பின் 13 வது மாநாட்டில் மதுரை மாநகர் மாவட்ட கழக இளைஞரணி சார்பில் பெருமளவில் கலந்துக் கொண்டு சிறப்பிப் பது என தீர்மானிக்கப்படுகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.