பட்டுக்கோட்டை, டிச. 23- கழக மாவட்ட மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் 19.12. 2024 அன்று காலை 11 மணியளவில் பட்டுக்கோட்டை சிற்பி வை. சேகரின் பெரியார் மாளிகை லட்சுமி இல்லத்தில் வளர்மதி சேகர் தலைமையிலும், பொதுக்குழு உறுப்பினர் தேவி நீலகண்டன், மதுக்கூர் தேவிகா அண்ணாதுரை, சரோஜா நல்ல தம்பி முன்னிலையிலும் நடைபெற்றது.
இல்லம் தேடி மகளிர்
மாநில கழக மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, தமது உரையில் “பெண்கள் அரசியல் தெளிவு பெற வேண் டும், தெளிவு பெற்றால் தான் நாடும், வீடும் நலம் பெறும்.
திராவிட மாடல்’ ஆட்சி சிறப்பாக நடைபெறுவதை மக்களிடம் எடுத்துச் சொல்லும் தூதுவர்களாக மகளிர் ஆகிய நாம் இருந்தால் தான் அடுத்தடுத்த வீடுகளில் நமது இயக்க கொள்கைகளையும், ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளையும் விளக்கிக் கூற முடியும்.
இல்லம் தேடி மகளிரை சந்தியுங்கள்
92 வயதிலும் நமது தலைவர் ஆசிரியர் ஓய்வு எடுக்காமல் உழைத்துக் கொண்டு இருக்கிறார். ஆசிரியரிடம் அய்யா நீங்கள் ஓய்வெடுங்கள் என்று கூறினால் நம்மை மிகவும் கடிந்து கொள் வார். அந்த அளவிற்கு ஓய்வு இல்லாமல் நாளும் உழைத்து வரும் தலைவரை நாம் பெற்றிருக் கிறோம் நமது ஆசிரியர் இல்லம் தேடி கல்வி என்பது போல் இல்லம் தேடி மகளிரை சந்தியுங்கள் என்று எங்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்கள். அதன் அடிப்படையிலேயே நாங்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இயக்க குடும்பத்தில் உள்ள மகளிர்களை சந்தித்து வருகிறோம்” என குறிப்பிட்டார்.
பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் அத்திவெட்டி பெ..வீரையன் மகளிர் அணி செயல் பாடுகள் குறித்து விளக்கினார்.
பொதுக்குழு உறுப்பினர் அரு..நல்லதம்பி, பட்டுக்கோட்டை நகர தலைவர் பொறியாளர் சிற்பி வை.சேகர், மாவட்ட கழக அமைப்பாளர் சோம.நீலகண்டன், மாவட்ட கழக தொழிலாளர் அணி தலைவர் முத்து துரைராஜ் , சேது பாவாசத்திரம் ஒன்றிய தலைவர் சி..செகநாதன், மதுக்கூர் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் புலவஞ்சி பெ..அண்ணாதுரை, பட்டுக்கோட்டை கழக ஒன்றிய செயலாளர் ஏனாதி சி..ரெங்கசாமி, மதுக்கூர் ஒன்றிய கழக அமைப்பாளர் மயநா..வை..இராதா கிருட்டிணன், பொறியாளர் கழக தோழர் சே.இங்கர்சால், லெட்சுமி ஆகியோர் உரையாற்றினார்
தீர்மானங்கள்
தமிழர் தலைவர் ஆசிரியர் 92ஆவது பிறந்த நாளை மகளிர் அணி மகளிர் பாசறை சார்பாக மாவட்ட அளவில் கொண்டாடுவது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழிகாட்டுதல்படி தொடர்ந்து இல்லம் தேடி மகளிர் சந்திப்பு நடத்துவது.
தெருமுனை கூட்டங்கள் நடத்தப்படும்
வாய்ப்புள்ள இடங்களில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பினை ஒட்டி வைக்கம் நூற்றாண்டு விழா, சுயமரியாதை இயக்க நூற் றாண்டு, கலைஞர் நூற்றாண்டு விழா, தமிழ்நாடு, கேரளா அரசுகளுக்கு நன்றி தெரிவித்தல் தெருமுனை கூட்டம் நடத்துவது.
மகளிர் அணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் தமிழர் தலைவரால் அறிவிக்கப் பட்டுள்ள பெரியார் பிஞ்சு இதழ் சந்தா சேர்ப்பு பணியை மேற்கொள்வது.
கிளை, ஒன்றிய, நகர அளவில் மகளிர் அணி மற்றும் பாசறை பொறுப்பாளர்களை நியமிப்பது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவித்துள்ள‘ திராவிட மாடல்’, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் மகளிர் தோழர்கள் அதிக அளவில் பங்கேற்பது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
தீர்மானங்களை வாசித்து மாவட்ட மகளிர் அணி செயலாளர் இராசலட்சுமி தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்
புதிய பொறுப்பாளர்கள்
தொடர்ந்து மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி மாவட்ட கழகத்திற்கு புதிய மகளிர் அணி பொறுப்பாளர்களை அறிவித்தார்.
மாவட்ட மகளிர் அணி தலைவர்: வளர்மதி சேகர், மாவட்ட செயலாளர் இராச லட்சுமி தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் சுபத்ரா உத்ராபதி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் தேவி நீலகண்டன், மாவட்ட செயலாளர் தேவிகா அண் ணாதுரை, மாவட்டத் துணைத் தலைவர் ஜோதி சேகர் ஆகியோர் ஒருமனமாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப் பட்டனர். கலந்துரையாடல் கூட்டத்தினை பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா..நீலகண்டன் தொகுத்து வழங்கினார்.
கலந்துரையாடல் கூட்டத்தில் ஆறு பெரியார் பிஞ்சு சந்தா வழங்கப்பட்டது