விடுதியில் தங்கிப் பயிலும் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை மாணாக்கர்களுக்கான உணவு மானியத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது.
பள்ளி மாணவர்களின் மானியம் ரூ.1,000லிருந்து, ரூ.1,400 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கான மானியம் ரூ.1,100லிருந்து ரூ.1,500ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாநில அளவில் இத்துறையின் கீழ் 1,453 பள்ளி, கல்லுாரி விடுதிகள் உள்ளன. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.