பாபநாசம், ஜூலை 21 – வைக்கம் நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் விளக்க தொடர் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் பாபநாசம் ஒன்றியம் அய்யம்பேட்டை சாவடி பஜாரில் 8.7.2023 அன்று மாலை நடைபெற்றது. அய்யம் பேட்டை நகர கழகத்தின் செயலாளர் வை. அறிவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் வ. அழகுவேல், அய்யம் பேட்டை நகர தலைவர் வெ. இராவணன், சூலமங் கலம் ச. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கை.ராசராசன் வரவேற்று பேசினார். மாவட்ட அமைப் பாளர் வ.அழகுவேல், மாவட்ட செயலாளர் சு.துரைராசு, பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் க. திருஞான சம்பந்தம், ஒன்றிய செயலாளர் சு.கலியமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்து உரை நிகழ்த்தினார்கள்.
ஒன்றிய துணைச் செயலாளர் க. ஜனார்த்தனன், மாத்தூர் சுதாகர், பாபநாசம் நகர தலைவர் வெ. இளங்கோவன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் கோவி. பெரியார் கண்ணன், ஒன்றிய அமைப்பாளர் கை. ராஜராஜன், கோபிநாதன், அய்யம்பேட்டை சதாசிவம், மாகாளிபுரம் சைவராஜ், ஒன்றிய துணை செயலாளர் க.ஜனார்த்தனன், ஆகிய கழகத்தின் தோழர்கள் கலந்து கொண்டனர். கழகப் பேச்சாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன் சிறப்புரை யாற்றினார். ஒன்றிய அமைப்பாளர் கை.ராஜராஜன் நன்றி யுரையாற்றினார்.
ஒன்றிய, நகர கிளை கழகப் பொறுப்பாளர்கள் அனைத்து கட்சியினர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.