மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 21.12.2024 அன்று சென்னை, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வில், உணவு பாதுகாப்புப் பயிற்சி பற்றிய விளக்க காணொலிக்கான குறுந்தகடை வெளியிட்டார். இந்நிகழ்வில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் லால்வேனா, கூடுதல் ஆணையர் மருத்துவர் தேவபார்த்தசாரதி, ஒன்றிய அரசு இணை இயக்குநர் (பயிற்சி) அன்கேஷ்வர் மிஸ்ரா, தென்மண்டல இயக்குநர் வி.கே.பஞ்சம், பெருநகர சென்னை மாநகராட்சி ஆளும் கட்சி தலைவர் ந.இராமலிங்கம், நகர நல அலுவலர் மருத்துவர் ஜெகதீசன், சென்னை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் சதிஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.