22.12.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அம்பேத்கர் குறித்து அமித்ஷா வின் சர்ச்சை பேச்சை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் 150 நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* வாக்குச்சாவடி சிசிடிவி காட்சிகளை வேட்பாளர் உள்ளிட்ட பொதுமக்கள் பார்த்திட தடை; தேர்தல் விதியை திருத்தியது ஒன்றிய அரசு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நாடாளுமன்ற கூட்டத்தொடர் பாஜகவின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்தி உள்ளது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் சிறப்பாக செயல்பட்டனர், “மக்களின் குரலை உயர்த்துவதில் ஹீரோக்களாக” உருவெடுத்தனர்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கன்னடம் போன்ற பிராந்திய மொழிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வகையில், நாடு முழுவதும் ஹிந்தி மொழியை திணிக்க மோடி அரசு முயற்சித்து வருவதாக முதலமைச்சர் சித்தராமையா கண்டனம். ஹிந்தி திணிப்புக்கு எதிராக அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து கன்னடத்தை காப்பாற்ற வேண்டும் என்று 87ஆவது கன்னட சாகித்திய சம்மேளனத்தை தொடங்கி வைத்து பேசினார்.
தி இந்து:
*சமீபத்தில் நடந்த அரியானா சட்டமன்ற தேர்தலில் ஒரு குறிப்பிட்ட சாவடி தொடர்பான காட்சிப் பதிவு மற்றும் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் மனுதாரருக்கு வழங்குமாறு பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் கூறியதையடுத்து, ஒன்றிய சட்ட அமைச்சகம், தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து விதிகளில் மாற்றத்தை ஏற்படுத் தியுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.
.- குடந்தை கருணா