பாலியல் பருவம் அபாயகரமான பருவம், சுலபத்தில் நெருப்புப் பற்றிக் கொள்ளக் கூடிய பொருளைப் போல் மிக்க பத்திரமாய்க் காப்பாற்றப்பட வேண்டிய பருவம். ஆனால் அப்பருவத்தைப் பொறுப்பற்று தற்கால விளம்பரக் காரியங்களுக்கு அடிமைப்படுத்தி விடாமலும், பின்னால் சலிப்பும், துக்கமும் பட வேண்டிய காரியங்களுக்குச் சம்பந்தப்படுத்தி விடாமலும் நன்றாக ஆய்ந்து ஓய்ந்து பார்த்து அவசியமானதும், நிலையானதுமான காரியங்களைச் செய்யவும், பயனளிக்கவும் கூடியதுமான காரியத்துக்கும் பயன்படுத்த வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’